மிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனைக்கு வந்தது!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய பஜாஜ் டோமினார் 400சிசி பைக் சற்றுமுன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பஜாஜ் நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த பைக் மாடலாக வந்திருக்கும் புதிய டோமினார் பைக் பற்றிய விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட பஜாஜ் டோமினார் பைக் ரூ.1.50 லட்சம் விலையிலும், சாதாரண டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.1.36 லட்சம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 400சிசி பைக் மார்க்கெட்டில் இது மிக சவாலான விலையாக இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கில் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிக்குட்பட்ட 373.3சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் ட்ரிப்பிள் ஸ்பார்க் ப்ளக்குகள் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்டது. அதிகபட்சமாக 34.5 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க்கையும் வழங்கும்.

இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது 0 - 100 கிமீ வேகத்தை 8.2 வினாடிகளில் எட்டிவிடும் என்பதுடன், மணிக்கு 148 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது. இதன் எடை 182 கிலோ என்பதும் மனதில் வைக்க வேண்டிய விஷயம்.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கில் கியர்களை விரைவாக குறைப்பதற்கான ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி உள்ளது மேலும், பெரிமீட்டர் ஃப்ரேம் கொண்ட முதல் பஜாஜ் பைக் மாடலாகவும் இது வந்துள்ளது. புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கில் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. மைலேஜ் விபரம் வெளியிடப்படவில்லை.

2014ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடலுக்கும், தற்போது தயாரிப்பு நிலைக்கு உயர்ந்திருக்கும் டோமினார் பைக் மாடலுக்கும் வடிவமைப்பில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. சில மாற்றங்கள் மட்டுமே காணப்படுகிறது.

பஜாஜ் டோமினார் பைக் மிக முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த புதிய பைக்கில் எல்இடி ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. பெட்ரோல் டேங்கிலும் மற்றொரு துணை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை கொடுக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

முன்புறத்தில் 110/70 - 17 அங்குல டயரும், பின்புறத்தில் 150/60 அளவுடைய 17 அங்குல டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளிரயன்ஸ் 157மிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்நைட் புளூ, ட்வில்லைட் ப்ளம் மற்றும் மூன் ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

ரூ.9,000 முன்பணத்துடன் ஆன்லைனில் இந்த புதிய பஜாஜ் டோமினார் பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள 22 நகரங்களில் இருக்கும் 80 டீலர்களில் முதல்கட்டமாக விற்பனைக்கு செல்கிறது.

400சிசி பைக் மார்க்கெட்டில் மஹிந்திரா மோஜோ மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் நேரடியாக மோத களமிறங்கி உள்ளது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, December 15, 2016, 13:48 [IST]
English summary
Bajaj Dominar 400 launched in India; prices start at Rs 1.36 lakh ex-showroom (Delhi).
Please Wait while comments are loading...

Latest Photos