பஜாஜ் டொமினார் 400 பைக்கின் உற்பத்தி துவங்கியது: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

பஜாஜ் நிறுவனத்தின் புதிய 400சிசி பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கிறது. எனவே, அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த புதிய பைக் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது.

By Saravana Rajan

பல்சர் மூலம் பெரும் புகழ்பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்து சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் மீது கவனத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், புதிய 400சிசி பைக் மாடலை தயாரித்துள்ளது.

அண்மை காலமாக மிக தீவிரமான சோதனை ஓட்டங்களில் இருந்த இந்த புதிய பைக் மாடல் தற்போது விற்பனைக்கு தயாராகி உள்ளது. பல்சர் வரிசையில் வெளிவரும் என்று தகவல்கள் வந்த நிலையில், க்ரேட்டோஸ் 400 என்ற புதிய பெயரில் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

புதிய பிராண்டு பெயர்

தற்போது பஜாஜ் டொமினார் 400 என்ற பெயரில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகில் சகன் என்ற இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆலையில் புதிய டொமினார் 400 பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கிறது.

அதிவேக பஜாஜ் பைக்

ஆலையின் உற்பத்திப் பிரிவிலிருந்து நேற்று முதல் பைக் மாடல் வெளிவந்தது. இந்த உற்பத்தி பிரிவு முழுவதும் பெண் பணியாளர்களால் கையாளப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் அதிவேக பைக் மாடல் என்ற பெருமையுடன் மார்க்கெட்டுக்கு வருகிறது.

மாற்றங்கள்

பல்சர் சிஎஸ்400 கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த பைக் சில மாறுதல்களுடன் தயாரிப்பு நிலை மாடலாக மேம்பட்டிருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.

எஞ்சின்

இந்த பைக்கில் 373சிசி லிக்யூடு கூல்டு டிடிஎஸ்-ஐ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் இருக்கிறது. அதிகபட்சமாக 34.5 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க்கையும் வழங்கும்.

ஏபிஎஸ் பிரேக்

இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட்டுகள் ஆப்ஷனலாக வழங்கப்படும். இதுதவிர, டியூவல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

ரூ.1.6 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு நாள் குறிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Bajaj Auto has commenced the production of much awaited Dominar 400 at the Chakan plant.
Story first published: Saturday, November 19, 2016, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X