பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், புதிய பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம், குறைந்த மற்றும் மிதமான விலையில் சிறந்த தயாரிப்புகளை வழகுவதில் புகழ் பெற்றுள்ளது. அவ்வகையில், பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக் என்ற பெயரில் மற்றொரு புதிய பைக்கை வழங்கி வருகிறது.

வழக்கமாக, பஜாஜ் நிறுவனத்தின் பைக்குகள் நல்ல மைலேஜ் திறன் கொண்டுள்ளன.

தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக்...

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக்...

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக், இதன் பெயருக்கு ஏற்றவாறு, இந்த மாடலில் ரைட் மற்றும் சொகுசுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக், கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் வகையை சேர்ந்ததாகும்.

முந்தைய மாடலை காட்டிலும், பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக், 20% குறைவான ஜெர்க்குகள் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இதன் ஃபிரண்ட் சஸ்பென்ஷன் 28% என்ற அளவிலும், இதன் டபுள் ஸ்பிரிங் ரியர் சஸ்பென்ஷனின் நீளம் 22% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ப்ரிங் சாஃப்ட் சீட் ('Spring Soft' seat) எனப்படும் கூடுதல் மென்மை கொண்ட சீட்கள் பொருத்தபட்டுள்ளது. கூடுதளாக, பைக் இயக்கும் போது, கூடுதல் வசதி வழங்கும் ரப்பர் ஃ புட்பேட்கள் சேர்க்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக், சிங்கிள் சிலிண்டர் உடைய 102 சிசி, டிடிஎஸ்-ஐ இஞ்ஜின் உள்ளது.

இந்த இஞ்ஜின் 8 பிஹெச்பியையும், 8.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய் அமைப்பின் ஒப்புதல் படி, பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக், ஒரு லிட்டருக்கு 104 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக், ரெட், பிளாக் மற்றும் புளு ஆகிய நிறங்களில் வழங்கப்படுகிறது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக், பிளாட்டினா 100 அல்லாய் இஎஸ் மற்றும் பிளாட்டினா 100 அல்லாய் கேஎஸ் ஆகிய 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

விலை;

விலை;

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக்கின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளாட்டினா 100 அல்லாய் இஎஸ் - 42,541 ரூபாய்

பிளாட்டினா 100 அல்லாய் கேஎஸ் - 44,554 ரூபாய்

குறிப்பு;

இந்த விலை விவரங்கள், எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபர்டெக் பைக்கிற்கு, 5,000 கிலோமீட்டர் இடைவெளிக்கு ஒரு முறை சர்வீஸ் என்ற அளவீட்டையும், 10,000 கிலோமீட்டர் இடைவெளிக்கு ஒரு முறை ஆயில் மாற்றம் என்ற அளவீட்டையும் வகுத்துள்ளனர்.

இதனால் பராமரிப்பு பிரச்னை மற்றும் அது தொடர்பான செலவுகள் 65% வரை குறையும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவிக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லிட்டருக்கு 96.9 கிமீ மைலேஜ்... வந்துவிட்டது புதிய பஜாஜ் பிளாட்டினா!

பிளாட்டினா தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Bajaj Auto has launched their commuter motorcycle Platina ComforTec in India. As the name suggests, Bajaj has given importance to ride and comfort of riding bike. Its Seat has been provided with 'Spring Soft' seat for added comfort for your seating. Rubber footpads helps in comfort while riding the bike. To know more about Bajaj Platina ComforTec Bike, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X