சத்தமில்லாமல் சந்தைக்கு வந்த புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிள்- முழுவிபரம்!

சத்தமில்லாமல் சந்தைக்கு வந்தது புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிள்.

By Saravana Rajan

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. வித்தியாசமான வடிவமைப்பு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்தத நிலையில், பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை குறைவான வி12 என்ற புதிய மோட்டார்சைக்கிளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டீலர்ஷிப்புகளை அடைந்துவிட்ட இந்த புதிய மோட்டார்சைக்கிள் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ளது.

சத்தமில்லாமல் சந்தைக்கு வந்த புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளை போன்றே இந்த பைக்கிலும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட உலோகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

சத்தமில்லாமல் சந்தைக்கு வந்த புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிள்

டிசைன் அடிப்படையில் பஜாஜ் வி15 மாடலுக்கும், இப்போது வந்திருக்கும் புதிய வி12 மாடலுக்கும் வித்தியாசங்கள் இல்லை. ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என அனைத்தும் வித்தியாசம் இல்லை. ஆனால், புதிய அலாய் வீல்களுடன் வந்துள்ளது.

சத்தமில்லாமல் சந்தைக்கு வந்த புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிள்

புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிளில் 124.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 11 பிஎஸ் பவரையும், 10.8 என்எம் டார்க் திறனையும் இந்த மோட்டார்சைக்கிள் வழங்கும்.

சத்தமில்லாமல் சந்தைக்கு வந்த புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிள்

புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிளின் இருசக்கரங்களிலும் டிரம் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வி15 மோட்டார்சைக்கிளில் 120/90 அளவுடைய டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில், இந்த பைக்கில் 100/90 டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சத்தமில்லாமல் சந்தைக்கு வந்த புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிள்

புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிள் ரூ.56,283 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பஜாஜ் வி15 பைக்கைவிட விலை குறைவாக வந்திருக்கும் இந்த மாடலும் விற்பனையில் நிச்சயம் புதிய மைல்கல்களை பதிக்க வழி வகுக்கும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
Bajaj V12 Motorcycle launched in India.
Story first published: Wednesday, December 28, 2016, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X