பெனெல்லி டிஎன்டி135 மினி பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

பெனெல்லி டிஎன்டி 135 மினி பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Written By:

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பெனெல்லி நிறுவனத்தின் பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள்கள் அமோக வரவேற்பை பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் விற்பனையில் அசத்தியது.

விற்பனை தந்த உற்சாகத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் தற்போது பல புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது பெனெல்லி. அதில், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள பைக் மாடல் பெனெல்லி டிஎன்டி135.

மிக வித்தியாசமான தோற்றத்தில் கவரும் இந்த பைக் மாடல் விரைவிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கு தக்கவாறு, புனே அருகில் இந்த பைக் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்த படம் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகி உள்ளன.

பெனெல்லி டிஎன்25 பைக்கின் டிசைன் அம்சங்களை ஒத்திருக்கும் மினி பைக் மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு ஹோண்டா நவி போல தோற்றமளித்தாலும், இது மோட்டார்சைக்கிளுக்கு உண்டான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த பைக்கில் 4 எல்இடி விளக்குகள் கொண்ட ஹெட்லைட், பெனெல்லி டிஎன்டி வரிசை பைக்குகள் போன்று மிரட்டலான தோற்றத்தை தரும் வகையிலான ஃப்ரேம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஃப்ரேம்கள் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு வசீகரமாக இருக்கிறது.

அடக்கமானதாகவும், அகலமானதாகவும் மிரட்டும் வகையிலான 12 அங்குல டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிக தரை இடைவெளி, மோனோ ஷாக் அப்சார்பர், முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 190மிமீ டிஸ்க் பிரேக் என்று அசத்துகிறது. 

இந்த பைக்கின் பிரேக் காலிபர்கள் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டிருப்பதும் கவர்ச்சியாக இருக்கிறது. இருக்கையுடன் இயைந்து நிற்கும் இரட்டை செலென்சர் குழல்களும் இதன் டிசைனுக்கு வலு சேர்க்கின்றன.

இந்த மினி பைக்கில் 135சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 12.8பிஎச்பி பவரையும், 10.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இதுபோன்ற பைக் மாடல்களை பாக்கெட் பைக் அல்லது மினி மோட்டோ பைக் என்று குறிப்பிடுவதுண்டு. பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை ஒத்திருக்கும் வகையில் இதுபோன்ற பைக்குகளை வாகன ஆர்வலர்கள் சொந்தமாக உருவாக்குவது வழக்கம். ஆனால், அவர்களுக்கு ஏதுவாக இந்த மாடலை பெனெல்லி களமிறக்க உள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பெனெல்லி டிஎன்டி135 மினி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.1.30 லட்சம் விலையில் இந்த புதிய மினி பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது பைக் சேகரிப்பு பிரியர்களையும் கவரும் என நம்பலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Benelli TNT135 Mini Bike Will be Launched in India by Next year.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK