மழை நேரத்தில் பயணிப்பதற்கு ஏற்ற டாப் 4 பைக் மாடல்கள்!

By Saravana Rajan

கடும் கோடையிலிருந்து விடுபட்டு, மழைக்காலத்தை நோக்கி காலநிலை பயணத்தை துவங்கியிருக்கிறது. வெப்பத்திலிருந்து விடுதலை கிடைத்தது மகிழ்ச்சியை தந்தாலும், மழைக் காலத்தில் நம்மூர் சாலைகளில் பைக்குகளில் பயணிப்பது சவாலாகவே இருக்கிறது. திடீர் பள்ளங்கள், கழிவு நீர் கால்வாய்கள் அடைத்துக் கொண்டு நீர்தேங்கும் சாலைகளில் வீடு போய் சேர்வது சாகசங்கள் நிறைந்த பயணமாகவே மாறிவிடுகிறது.

அனைத்து வகை பைக்குகளும் மழை நேரத்தை எதிர்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது. எனினும், சில பைக் மாடல்கள் மழை நேரத்திலும் ஓரளவு பாதுகாப்பான பயணத்தை வழங்குவதில் சிறப்பானதாக இருக்கும். அதற்கு அட்வென்ச்சர் டூரர் வகை பைக்குகள் சிறந்ததாக கருதப்படுகிறது. அட்வென்ச்சர் டூரர் வகை பைக்குகள், அதிக இடைவெளி கொண்ட மட்கார்டு, அதிக தரை இடைவெளி கொண்டதாக வருவது அதன் சிறப்பு. அந்த வகையில், நம் நாட்டு சாலைகளை மழை நேரத்தில் எதிர்கொள்வதற்கான சில பைக் மாடல்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

பஜாஜ் பல்சர் 200 ஏஎஸ்

பஜாஜ் பல்சர் 200 ஏஎஸ்

நம் நாட்டு சாலை நிலைகளுக்கு ஏற்ற சிறப்பான அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல். நீர் நிறைந்த சாலைகளிலும் எளிதாக கடக்க உதவும் விதத்தில் இதன் இருக்கை அமைப்பு, 167 மிமீ அளவுக்கு தரை இடைவெளி மற்றும் மட்கார்டு அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் 23 பிஎச்பி பவரையும், 18 என்எம் டார்க்கையும் வழங்கும் 199.5 சிசி எஞ்சின் உள்ளது.

இதர சிறப்பம்சங்கள்

இதர சிறப்பம்சங்கள்

இரவு நேர பயணத்திற்கு ஏற்ப புரொஜெக்டர் விளக்குகளும் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 230 மிமீ விட்டமுடைய டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதி செய்யும். மழை நேரத்தில் டயர்கள் ஈரத்தில் எளிதாக பஞ்சராகும் வாய்ப்புள்ளது. இதற்கு ஏதுவாக, முன்புறத்திலும், பின்புறத்திலும் ட்யூப்லெஸ் டயர்கள் இருப்பதால், பஞ்சரானாலும், உடனடியாக காற்று இறங்காது. ரூ.91,500 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

கேடிஎம் டியூக் 200

கேடிஎம் டியூக் 200

மழை நேரத்தில் பயணிப்பதற்கு ஏற்ற பைக்குகளில் ஒன்று கேடிஎம் ட்யூக் 200. எளிதான கையாளுமை, அதிக தரை இடைவெளி, அதிக இடைவெளி கொண்ட பின்புற மட்கார்டு அமைப்பு போன்றவை இந்த பைக்கை மழை நேரத்தில் எளிதாக கையாள உதவுகிறது.

இதர சிறப்பம்சங்கள்

இதர சிறப்பம்சங்கள்

அத்துடன், இதன் செயல்திறன் மிக்க எஞ்சினும் மழைநேரத்தை எதிர்கொள்வதற்கு உகந்ததாக இருக்கிறது. டிஸ்க் பிரேக் வசதியும் உள்ளது கூடுதல் பாதுகாப்பை வழங்கும். ரூ.1.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹீரோ இம்பல்ஸ்

ஹீரோ இம்பல்ஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஹீரோ இம்பல்ஸ் பைக்கும் மழை நேரத்தில் சாலைகளை எளிதாக கடப்பதற்கு உதவும். அதிக இடைவெளி கொண்ட மட்கார்டுகள், தண்ணீர் புகாதவாறு, இருக்கையுடன் இயைந்து செல்லும் புகைப்போக்கி குழாய்கள், பிரத்யேக டயர்கள் மழை நேரத்தில் எளிதாக ஓட்ட உதவும்.

 இதர சிறப்பம்சங்கள்

இதர சிறப்பம்சங்கள்

பள்ளம் மேடுகள், நீர் தேங்கிய சாலைகளிலும் அச்சமில்லாமல் செலுத்த முடியும். ரூ.71,400 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

இமயமலை பகுதியில் மோசதமான சீதோஷ்ண நிலையிலும், மிகவும் கரடு முரடான சாலைகளிலும் பயணிக்க விரும்பும் சாகச பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப்ட்டிருக்கும் மாடல் இது.

இதர சிறப்பம்சங்கள்

இதர சிறப்பம்சங்கள்

அதிக இடைவெளி கொண்ட மட்கார்டு அமைப்பு, திறந்த செயின் கார்டு அமைப்பு, அதிக தரைப்பிடிப்பை தரும் விசேஷ டயர்கள் என இந்த மோட்டார்சைக்கிளும் மழை நேரத்தில் பயணிக்க ஏதுவான மாடலாக கூறலாம்.

Most Read Articles
English summary
best bikes for riding in rain.
Story first published: Tuesday, June 28, 2016, 16:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X