அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 6 ஸ்கூட்டர்கள்!

By Saravana Rajan

இன்றைய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மிக எளிதாக ஓட்டுவதற்கான சிறந்த போக்குவரத்து சாதனம் என்றால் ஸ்கூட்டர்கள்தான். இருபாலரும் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்கள், பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, பட்ஜெட் விலை போன்ற விஷயங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

ஆனால், மைலேஜ் என்று வரும்போது பைக்குகளுடன் ஒப்பிடும்போது ஸ்கூட்டர்கள் குறைவாக இருப்பதுதான் வாடிக்கையாளர்களை தயங்க செய்யும் விஷயம். இந்தநிலையில், அதிக மைலேஜ் தருவதோடு, மதிப்பிலும் சிறந்த 6 ஸ்கூட்டர்கள் பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 01. ஹோண்டா ஆக்டிவா ஐ

01. ஹோண்டா ஆக்டிவா ஐ

இந்திய ஸ்கூட்டர்களின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் மட்டுமல்ல, மைலேஜிலும் முன்னிலை வகிக்கிறது. தரம், டிசைன், விலை என அனைத்து விதத்திலும் தன்னிறவை தரும் இந்த மாடல் எரிபொருள் சிக்கனத்திலும் நம்பர்-1 மாடலாக இருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா- ஐ ஸ்கூட்டர் லிட்டருக்கு 69.6 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் லிட்டருக்கு 50-55 கிமீ மைலேஜுக்கு குறையாது.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 6 ஸ்கூட்டர்கள்!

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109.2சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.74 என்எம் டார்க்கையும் வழங்கும். ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் மைலேஜ் தவிர்த்து, கோம்பி பிரேக் சிஸ்டம், ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளிட்டவையும் கூடுதல் சிறப்பாக இருக்கின்றன. ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. சாதாரண மாடல் ரூ.46,648 விலையிலும், டீலக்ஸ் மாடல் ரூ.47,135 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. மஞ்சள், நீலம், கருப்பு, சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

02. யமஹா ரே இசட்ஆர்

02. யமஹா ரே இசட்ஆர்

யமஹா ரே இசட்ஆர் ஸ்கூட்டர் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர் மாடல்களில் இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்த ஸ்கூட்டர் இளைய சமுதாயத்தினருக்கு ஏற்ற ஸ்டைலான மாடல். இந்த ஸ்கூட்டரின் வித்தியாசமான வடிவமைப்பு, ஹோண்டா டியோ வாடிக்கையாளர்களை தன்பால் ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. யமஹா ரே இசட்ஆர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 6 ஸ்கூட்டர்கள்!

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 113சிசி எஞ்சின் அதிகபட்சமாக 7 பிஎச்பி பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த ஸ்கூட்டர் 105 கிலோ மட்டுமே எடை கொண்டிருப்பதால், கையாள்வதற்கும் எளிதாக இருக்கிறது. டிரம் பிரேக், ஸ்டீல் வீலுடன் ஸ்டான்டர்டு மாடலாகவும், டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல் கொண்ட மற்றொரு மாடலிலும் கிடைக்கிறது. நடைமுறையில் இந்த ஸ்கூட்டர் 50 கிமீ என்ற அளவில் மைலேஜ் இருக்கும். இந்த ஸ்கூட்டர் ரூ.51,845 முதல் ரூ.54,115 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 03. ஹீரோ டூயட்

03. ஹீரோ டூயட்

ஹோண்டா பிரிந்த பின்னர், ஹீரோ தன் சொந்த முயற்சியில் உருவாக்கியிருக்கும் புதிய ஸ்கூட்டர் மாடல். கவர்ச்சியான டிசைன் மற்றும் வண்ணங்கள் இதற்கு வலுசேர்க்கின்றன. ஹீரோ பிராண்டின் மீதான நம்பகத்தன்மையும், சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவையும் இந்த ஸ்கூட்டருக்கு வலு சேர்க்கும் அம்சங்கள். இந்த ஸ்கூட்டர் 115 கிலோ எடை கொண்டது என்பதால் கையாள்வதில் சற்றே பிரச்னை ஏற்படலாம்.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 6 ஸ்கூட்டர்கள்!

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 110.9சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.31 பிஎச்பி பவரையும், 8.30 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. லிட்டருக்கு 63.8 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், நடைமுறையில் 45 கிமீ முதல் 50 கிமீ வரை மைலேஜ் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர் டிரம் பிரேக்குகள் கொண்டதாகவும், ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சங்கள். எல்எக்ஸ் மற்றும் விஎக்ஸ் ஆகிய இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. டூயட் எல்எக்ஸ் மாடல் ரூ.47, 450 விலையிலும், டூயட் விஎக்ஸ் ஸ்கூட்டர் ரூ.49,215 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. சிவப்பு, பச்சை, வெள்ளை, சாம்பல், கருப்பு மற்றும் மேட் ஃபினிஷ் சாம்பல் வண்ணங்களில் கிடைக்கிறது.

 04. சுஸுகி லெட்ஸ்

04. சுஸுகி லெட்ஸ்

சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டர் பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை கொண்டதாக சுஸுகி விற்பனை செய்து வருகிறது. அதாவது, இலகு எடை கொண்ட மாடல். கவர்ச்சிகரமான டிசைன், அகலமான இருக்கை போன்றவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள். அத்துடன், வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அதிக மைலேஜ் என்ற விஷயமும் இந்த ஸ்கூட்டரின் மிக முக்கிய அம்சம். இதன் இருக்கை உயரம் 765மிமீ என்பதால் எளிதாக கால் ஊன்றி பேலன்ஸ் செய்வதற்கும் சிறப்பானது. அத்துடன், வெறும் 98 கிலோ மட்டுமே எடை கொண்டது.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 6 ஸ்கூட்டர்கள்!

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 112.8சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வழங்கும். அதிகபட்சமாக 85 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 63 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 45 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரின் ஒற்றை வண்ணம் கொண்ட மாடல் ரூ.46, 250 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், இரட்டை வண்ணக் கலவை கொண்ட மாடல் ரூ.47,180 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

05 மஹிந்திரா கஸ்ட்டோ

05 மஹிந்திரா கஸ்ட்டோ

போட்டியாளர்களிடத்தில் இருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ளும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது மஹிந்திரா கஸ்ட்டோ. ஃப்ளிப் சாவி, இருக்கை உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி என சிறப்பம்சங்கள் ஏராளம்.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 6 ஸ்கூட்டர்கள்!

இந்த ஸ்கூட்டரில் இருக்கும்109.6சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வழங்கும். அதிகபட்சமாக 80 கிமீ வரை வேகம் செல்லும். இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டாலும், நடைமுறையில் 40 கிமீ முதல் 45 கிமீ வரை மைலேஜ் தரும். இதன் எடை 120 கிலோ என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ரூ.46,200 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

06. டிவிஎஸ் ஜுபிடர்

06. டிவிஎஸ் ஜுபிடர்

ஹோண்டா ஆக்டிவாவை குறிவைத்து டிவிஎஸ் மோட்டார்ஸ் களமிறக்கிய மாடல் இது. அந்த நோக்கத்தை பொய்யாக்காமல், விற்பனையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. டிசைன், சிறப்பம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் என அனைத்திலும் ஆக்டிவாவுடன் போட்டி போடுகிறது.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 6 ஸ்கூட்டர்கள்!

இந்த ஸ்கூட்டர் 108 கிலோ எடை கொண்டிருப்பதால் இருபாலருக்கும் ஏற்ற மாடலாக இருக்கும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜுபிடரின் மில்லியன்ஆர் எடிசனில் முன்புறத்தில் 220மிமீ டிரம் பிரேக்குடன் வந்துள்ளது. ரூ.49, 680 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Best Fuel-Efficient Scooters in India.
Story first published: Tuesday, August 30, 2016, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X