பிஎம்டபிள்யூ மோட்டோராட் சூப்பர்சார்ஜ்ட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் அறிமுகம்

By Ravichandran

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், சூப்பர்சார்ஜ்ட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக்கை அறிமுகம் செய்துள்ளனர்.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் சூப்பர்சார்ஜ்ட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் டேஹ்ரிந்து கொள்வோம்.

அறிமுகம்;

அறிமுகம்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக், இத்தாலியின் கோமோ ஏறியில் (Lake Como), மே 21 மற்றும் மே 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கன்கர்சோ தி'எளிகான்ஸா வில்லா தி'எஸ்ட் (Concorso d'Eleganza Villa d'Este) என்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யபட்டது.

டிசைன்;

டிசைன்;

ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக், 1936 பிஎம்டபிள்யூ ஆர்5 மாடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அறிமுகம் செய்யபட்டுள்ளது.

பழைய ஆர்5 போன்ற இதன் குறைந்தபட்ச மற்றும் கச்சிதமான டிசைன் அம்சங்கள், பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய இணைப்புகள்;

புதிய இணைப்புகள்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் சூப்பர்சார்ஜ்ட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக்கிற்கு, ஹேண்டில் பார்களின் இறுதியில், பிரேக் மற்றும் கிளட்ச் இணைக்கபட்டு, நவீனத்துவம் கலந்த தோற்றம் வழங்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக்கில் உபயோகிக்கபட்ட இஞ்ஜினிலும் சில சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. இதில் பொருத்தபட்டுள்ள சூப்பர்சார்ஜர் புதியதாக இருக்கலாம்.

ஆனால், இதில் பொருத்தபட்டுள்ள 494 சிசி ஏர் கூல்ட் பாக்ஸர் இஞ்ஜின், ஒரிஜினல் ஆர்5 பைக்கில் உபயோகிக்கபட்டதாகும். ஒரு காலத்தில், இது ரேசிங்கிற்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த இஞ்ஜின், அதன் நிஜமான பழைய வடிவத்தில் 24 பிஹெச்பியை வெளிபடுத்த்தும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக், உச்சபட்சமாக மணிக்கு ௧௩௫ கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

புதுப்பிப்பு;

புதுப்பிப்பு;

ரேசிங் செய்யும் போது, இந்த 1936 பிஎம்டபிள்யூ ஆர்5 மாடலின் இஞ்ஜினுக்கு குறிப்பிடக்கூடிய வகையிலான தேய்மானம் ஏற்பட்டது.

இதனால், இதன் இஞ்ஜின் மிகுந்த அக்கறையுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக்கினுடைய இஞ்ஜினின் வால்வ் கவர் மற்றும் பிரெஸ்ட்பிளேட், பில்லட் அலுமினியம் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

இது, கஷ்டம் பைக் பில்டர்களான ரான்னி நோரேன் மற்றும் பென்னி நோரேன் ஆகியோர்களால் உருவாக்கபட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், இதன் இஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றின் ஒரிஜினல் படங்களை நோரேன் சகோதரர்களுக்கு வழங்கியது.

பிரேக்குகள்;

பிரேக்குகள்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக்கிற்கு, தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலான டிஸ்க் பிரேக்குகள் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் பொருத்தபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் பைக்கின், முன் பக்க மற்றும் பின் பக்கதிற்கான சஸ்பென்ஷன் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி வடிவமைக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூவின் புதிய டூரிங் பைக் கான்செப்ட்... விபரம்!

இது பிஎம்டபிள்யூ பைக்தான்... நம்பலையா, உள்ளே வாங்க!!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
BMW Motorrad has unveiled R5 Hommage Concept bike at Concorso d'Eleganza Villa d'Este, held in Lake Como in northern Italy. R5 Hommage pays tribute to 1936 BMW R5 model. Its minimalistic looks raises glass to elegant design of old R5. Valve cover and breastplate of boxer engine were machined from billet aluminium by custom bike builders Ronny and Benny Noren...
Story first published: Monday, May 23, 2016, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X