ராயல் என்ஃபீல்டு நிறுனத்தின் தலைமை டிசைனர் பைர் டெர்பலேன்சி திடீர் ராஜிநாமா...

By Meena

இயக்குநர் ஷங்கர் படம் எப்படி இந்திய அளவில் பிரம்மாண்டத்தின் உச்சமோ அதுபோல மோட்டார் சைக்கள் உலகின் பிரம்மாண்டம் ராயல் என்ஃபீல்டு. புல்லட் மாடல் பைக்குகளைத் தயாரித்து வயது பேதமின்றி அனைவரையும் கவர்ந்திழுந்த நிறுவனம் அது.

டுகாட்டி, கேடிஎம், ஹார்லி டேவிட்சன் என வெளிநாட்டு பைக்குகள் இந்தியாவுக்குள் படையெடுத்தாலும், எதற்கு அஞ்சாமல் கம்பீர நடை போட்டுக் கொண்டிருக்கின்றன ராயல் என்ஃபீல்டு பைக்குகள்.

தலைமை டிசைனர்

மக்கள் அவற்றின் மேல் வைத்துள்ள நன்மதிப்பும், ஆதரவும்தான் அதற்கு முழுமுதற் காரணம். அப்படிப்பட்ட பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் புதிய பைக்குகளுக்கான வடிவமைப்பாளராக சர்வதேச அளவில் பிரபலமான டிசைனர் பைர் டெர்பலேன்சி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த பைர் டெர்பலேன்சி, லண்டனில் உள்ள ராயல் கலைக் கல்லூரியில் முதுகலை டிரான்ஸ்போர்ட் டிசைன் படிப்பை முடித்தவர். 60 வயது நிரம்பிய அவர், பல அல்ட்ரா மாடர்ன் பைக்குகளை வடிவமைத்த பெருமைக்குச் சொந்தக்காரர்.

இதற்கு முன்னர் டுகாட்டி, பியாஜியோ, மோட்டோ குஸ்ஸி, நார்டன் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களில் தலைமை வடிவமைப்பு அதிகாரியாக பைர் டெர்பலேன்சி பணியாற்றியுள்ளார்.

டுகாட்டி மல்ட்டிஸ்டிரேட்டா, ஹைப்பர் மோட்டார்டு, எக்ஸ் 132 ஹெல்கேட் ஸ்பீட்ஸ்டர் உள்ளிட்ட மாடல் பைக்குகள் அவரது வடிவமைப்பில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றவை.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இன்டீரியர் டிசைனராகவும் அவர் பணியாற்றிருப்பது நினைவுகூறத்தக்கது. இந்த நிலையில்தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்குள் அவர் தடம் பதித்தார்.

கடந்த 20 மாதங்களுக்கு முன்னர் ராயல் என்ஃபீல்டு டிசைனராகப் பொறுப்பேற்ற அவர், பல புதிய வடிவமைப்பில் புல்லட்களை அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பைர் டெர்பலேன்சியின் ராஜிநாமாவுக்கான உரிய காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

அடுத்தகட்டமாக பைர் டெர்பலேன்சி எந்த நிறுவனத்துக்காக செயல்படப் போகிறார் என்பது தொடர்பான விவரங்களும் வெளிவரவில்லை. பைர் டெர்பலேன்சியின் டிசைனிங் ஸ்டைலை விரும்புவர்களுக்கு, அவர் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து விலகியது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Most Read Articles
English summary
Celebrated Motorcycle Designer Pierre Terblanche Quits Royal Enfield.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X