சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பஜாஜ் டோமினார் பைக்கின் விலை விபரம்!

Written By:

பஜாஜ் நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த பைக் மாடலாக புதிய டோமினார் பைக் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்களுடன், மிக சவாலான விலையில் வந்திருப்பதால், இளைய சமுதாயத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், இந்த பைக்கை வாங்க திட்டமிடுவோருக்கு ஏதுவாக சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த பைக்கின் விலை விபரத்தை கீழே வழங்கியிருக்கிறோம்.

பொதுவாக பஜாஜ் நிறுவனத்தின் பைக்குகள் புனே நகரில்தான் விலை குறைவாக இருக்கும். அங்குதான் பஜாஜ் உற்பத்தி ஆலையும், தலைமையகமும் இருப்பதே முக்கிய காரணம். ஆனால், இந்த முறை நாட்டிலேயே டெல்லியில்தான் இந்த பைக்கின் விலை குறைவாக இருக்கிறது. அதாவது, ஏபிஎஸ் பிரேக் அல்லாத மாடல் ரூ.1.36 லட்சத்திலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.1.50 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.

நாட்டிலேயே அதிகபட்சமாக கொல்கத்தா நகரில்தான் இந்த பைக்கின் விலை அதிகமாக இறுக்கிறது. பேஸ் மாடல் ரூ.1,42,731 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.1,57,117 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

அடுத்து மும்பையில் இந்த பைக்கின் பேஸ் மாடல் ரூ.1.37,340 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.1,51,199 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். புனே நகரிலும் இதே விலையில் கிடைக்கும்.

தென் இந்தியாவின் மிக முக்கிய பைக் மார்க்கெட்டாக விளங்கும் பெங்களூரில் ரூ.1,37,723 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏபிஎஸ் மாடல் ரூ.1,51,973 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

திருவனந்தபுரத்தில் பேஸ் மாடல் ரூ.1,39,432 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏபிஎஸ் மாடல் ரூ.1,53,682 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியிலும் இதே விலையில் கிடைக்கும்.

சென்னையில் பஜாஜ் டோமினார் பைக்கின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அல்லாத மாடல் ரூ.1,38,625 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மாடல் ரூ.1,52,875 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். கோயம்புத்தூரிலும் இதே விலையில் கிடைக்கும். 

இது அறிமுகச் சலுகை விலையாக கருதப்படுகிறது. எனவே, புத்தாண்டு துவக்கத்தில் விலை உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதால், உடனடியாக முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஏற்கனவே, இந்த பைக் ரூ.1.70 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மிக சவாலான விலையில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Citywise Prices of All New Bajaj Dominar 400 Bike.
Please Wait while comments are loading...

Latest Photos