புதிய 135சிசி பைக்கை இந்தியாவில் களமிறக்கும் பெனெல்லி!

Written By:

இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கியது இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம். டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் துணையுடன் இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது பெனெல்லி.

இந்நிறுவனத்தின் பிரிமியம் பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்தில் மிக சிறப்பான விற்பனையை பெனெல்லி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் வர்த்தகத்தை மிக வலுவாகவும், நீண்ட கால நோக்குடன் திட்டமிட்டு புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

அந்த வகையில், வரும் மார்ச் மாதத்தில் புதிய 135சிசி பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெனெல்லி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

புதிய 135சிசி பைக்கை அறிமுகம் செய்வதற்கு அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளும், சோதனை ஓட்டங்களும் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இவை அனைத்தும் முடிந்து வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்த புதிய பைக் மாடல் ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக இருக்கும். இந்த புதிய பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று பெனெல்லி - டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் கூட்டணி நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த புதிய பைக் மாடல் புனே நகர் அருகே தலேகானில் உள்ள டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். ரூ.350 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த ஆலையில், பெனெல்லி மற்றும் ஹயோசங் பிராண்டிலான பைக்குகளை டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் அசெம்பிள் செய்து வருகிறது.

மாதத்திற்கு 50,000 பைக்குகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையை புதிய மாடல்களின் வருகையையொட்டி, விரிவாக்கம் செய்யவும் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறது டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம்.

தற்போது பெனெல்லி பிராண்டில் டிஎன்டி25, டிஎன்டி300, டிஎன்டி600ஐ, டிஎன்டி600ஜிடி, டிஎன்டி899 மற்றும் டிஎன்டி ஆர் ஆகிய பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக் மாடல்கள் ரூ.1.84 லட்சம் முதல் ரூ.12.86 லட்சம் விலை கொண்டதாக இருக்கிறது.

இந்த நிலையில், புதிய 135சிசி மாடல் அந்த நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான மாடலாக வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, October 29, 2016, 10:02 [IST]
English summary
DSK Motowheels To Launch 135cc Mini Bike Next Year.
Please Wait while comments are loading...

Latest Photos