டிஎஸ்கே பெனெல்லியின் 750சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்

By Ravichandran

டிஎஸ்கே பெனெல்லி 750சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பெனெல்லி நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் ஏராளமான சூப்பர்பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த நிறுவனம், மேலும் சில புதிய மாடல்களையும், இந்தியாவிற்கான பிரத்யேகமான மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து தங்களின் போர்ட்ஃபோலியோ வலுப்படுத்த உள்ளனர்.

dsk-benelli-750cc-motorcycle-india-introduction-very-soon

ஃபிப்ரவரி மாதத்தில் நடைப்பெற்ற 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம் பல்வேறு ஈர்க்கும் வகையிலான மாடல்களை அறிமுகம் செய்தனர். டிஆர்கே 302, டிஎன்டி 135 மற்றும் பிஎக்ஸ் 250 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் காட்சிபடுத்தபட்டது. மிகவும் எதிர்பார்க்கபட்டு வரும் மாடலான லியோன்சினோ மாடல், 2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில், டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம் காட்சிபடுத்தியது.

தற்போது வெளியாகும் செய்திகள் படி, 2017-ஆம் ஆண்டிற்கு டிஎஸ்கே பெனெல்லி, வேறு சில வாகனங்கள் உடன், ஒரு 750சிசி மோட்டார்சைக்கிளையும் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த டிஎஸ்கே பெனெல்லி 750சிசி மோட்டார்சைக்கிள், பேரலல் ட்வின் இஞ்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதுவரை, இந்த 750சிசி மோட்டார்சைக்கிளுக்கு எந்த பெயரும் சூட்டப்படவில்லை. இதனால், இது பிஜே750ஜிஎஸ் ('BJ750GS') என்ற குறியீட்டு பெயர் (கோட்நேம்) உடன் தான் அழைக்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான படங்கள் மூலம், டிஎஸ்கே பெனெல்லியின் 750சிசி மோட்டார்சைக்கிள், சைட் எக்ஸ்ஹாஸ்ட் மஃப்ளர் கொண்டிருக்கும். இதன் இஞ்ஜின், ட்ரெல்லிஸ் ஃபிரேம் மீது வைக்கப்பட்டிருக்கும்.

செலவுகளை குறைப்பதற்கும், ஆதாயங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காகவும், ஏராளமான கூறுகள், தற்போது இருக்கும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் இருந்தே பகிர்ந்து கொள்ளப்படும்.

Most Read Articles
English summary
DSK Benelli is planning to introduce a new 750cc Motorcycle in India. This 750cc motorcycle is most likely to have a parallel-twin engine. So far, name of this motorcycle has not been revealed and is codenamed as 'BJ750GS'. This Motorcycle's engine will be suspended by a trellis frame. DSK Benelli will share several components with existing bikes to keep costs low...
Story first published: Monday, May 30, 2016, 10:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X