இந்தியாவில் தடம் பதித்த டுகாட்டி நிறுவனத்தின் ரொம்ப ஸ்பெஷலான சூப்பர்பைக்!

Written By:

சூப்பர்பைக் தயாரிப்பில் சிறந்து விளங்கும் இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் லிமிடேட் எடிசன் பைக் மாடல் ஒன்றை வெளியிட்டது. அந்த நிறுவனத்தின் 90ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த பிரத்யேக மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

டுகாட்டி 1299 பனிகேல் எஸ் சூப்பர் பைக்கில் பல கூடுதல் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விஷயங்கள் சேர்க்கப்பட்டு ஸ்பெஷல் மாடலாக வெளிவந்தது. டுகாட்டி 1299 பனிகேல் எஸ் ஆனிவர்சரியோ எடிசன் என்ற பெயரில் அந்த மாடல் சந்தைக்கு வந்தது.

மொத்தமாக 500 பைக்குகள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மிகவும் தனித்துவமான இந்த பைக் ஒன்று இந்திய மண்ணில் தடம் பதித்துள்ளது.

ஆம், புனே நகரை சேர்ந்த மயூர் சக்பால் என்பவர் இந்த தனித்துவமான சூப்பர் பைக்கை முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு தற்போது இந்த சூப்பர்பைக் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. புனே நகரில் உள்ள டுகாட்டி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பவேரியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பைக்கை மயூருக்கு டெலிவிரி கொடுத்தது.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மயூர் சக்பால், அவரது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். அதேபோன்று, டுகாட்டி நிறுவனத்தின் அதிகாரிகளும், டீலரில் உள்ள அதிகாரிகளும் பங்கேற்றனர்.

மயூருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டுகாட்டி 1299 பனிகேல் எஸ் ஆனிவர்சரியோ மாடலானது மொத்தம் விற்பனை செய்யப்பட உள்ள 500 பைக்குகளில் 277-வது வரிசை எண்ணை கொண்டுள்ளது. மேலும், அந்த எண் பைக்கிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி ரேஸ் பைக்குகளில் உள்ளது போன்று சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. தங்க நிற சாலிட் அலுமினியம் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரட்டை ஹெட்லைட் அமைப்பு, அகலமான டயர்கள் என அசத்துகிறது.

இந்த சூப்பர் பைக்கில் இருக்கும் 1,285சிசி எஞ்சின் அதிகபட்சமாக 205 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். சாதாரண 1299 பனிகேல் பைக் மாடலைவிட இது 10 குதிரைசக்தி திறனை கூடுதலாக வழங்கும் என்பதோடு, 10 சதவீதம் கூடுதல் டார்க் திறனையும் அளிக்க வல்லது.

இந்த பைக்கில் டிஎஃப்டி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு உள்ளது. ரேஸ், ஸ்போர்ட், வெட் ஆகிய மூன்று நிலைகளில் எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், டுகாட்டி வீலி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. கியர்களை நேரடியாக குறைப்பதற்கான குயிக் ஷிஃப்ட் வசதியும் உண்டு.

இந்த சூப்பர் பைக்கின் விலை குறித்த தகவல் இல்லை. ரூ.55 லட்சம் விலை மதிப்பில் மயூர் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டுகாட்டி பைக்குகளில் இதுதான் மிகவும் விலை உயர்ந்த பைக் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
India's only Ducati 1299 Panigale S Anniversario is sold in Pune Ducati dealership, Bavaria Motors.
Please Wait while comments are loading...

Latest Photos