டுகாட்டி எக்ஸ்டயாவெல் மோட்டார்சைக்கிள் பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம்

Written By:

டுகாட்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளை பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களின் போது, ஏறக்குறைய அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும், இந்தியாவில் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த வகையில், பண்டிகை காலத்திற்கு சற்று முன்னதாக எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளை டுகாட்டி அறிமுகம் செய்துள்ளது.

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய விரிவான தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

டுகாட்டி எக்ஸ்டயாவெல்...

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம், தங்களின் குருஸர் மோட்டார்சைக்கிள்களில் எக்ஸ்டயாவெல் மாடலை சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது, எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் என்ற இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றை, டுகாட்டி நிறுவனம், ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது.

டுகாட்டி நிறுவனம், சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யும் அனைத்து மாடல்களையும், இந்தியாவிலும் ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்து வருகிறது.

இஞ்ஜின்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல், எக்ஸ்டயாவெல் எஸ் என்ற இரு வேரியன்ட்களுக்கும், 1,262 சிசி, டெஸ்டாஸ்ரெட்டா எல்-ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இஞ்ஜின், 156 பிஹெச்பியையும், 129 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல், எக்ஸ்டயாவெல் எஸ் வேரியன்ட்களின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. டுகாட்டி நிறுவனம், ரியர் வீல்களுக்கு பவர் கடத்தும் வகையில், இந்த குருஸர் மோட்டார்சைக்கிள்களுக்கு சிங்கிள்-சைட் ஸ்விங் ஆர்ம் மற்றும் பெல்ட் டிரைவ் வழங்கியுள்ளது.

உச்சபட்ச வேகம்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மோட்டார்சைக்கிள், அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

பிற அம்சங்கள்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளில், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு டிஎஃப்டி ஸ்கிரீன் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆகிய அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை, டுகாட்டி நிறுவனம், எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளில் குரூஸ் கண்ட்ரோல், முழு எல்இடி லைட்டிங், பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், வேரியபிள் ரைடிங் மோட்கள், கீலஸ் இக்னிஷன் மற்றும் பேக்லிட் ஹேண்டில்பார் ஸ்விட்ச் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் பொருத்தியுள்ளது.

மேலும், இந்த எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் மோட்டார்சைக்கிள்களில் டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், ரைட் மோட்கள், கார்ணரிங் ஏபிஎஸ் மற்றும் டுகாட்டி லாஞ்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

சஸ்பென்ஷன்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையிலான தலைகீழாக உள்ள ஃபிரண்ட் ஃபோர்க்குகள், பின் பகுதியில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

பிரேக்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

போட்டி;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகளில், ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போடுகிறது.

புக்கிங்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் குருஸர் மோட்டார்சைக்கிளின் புக்கிங், இந்தியா முழுவதும் துவங்கிவிட்டது. அதிகப்படியான டுகாட்டி எக்ஸ்டயாவெல் குரூஸர் மோட்டார்சைக்கிள்கள், பெங்களூருவின் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களால் தேர்வு செய்யபட்டுள்ளது.

மறுபிரவேசம்;

இத்தாலிய மோட்டார்சைக்கிள் பிராண்ட்டான டுகாட்டி, 2015-ல் இந்தியாவில் நேரடி விற்பனையை இந்தியாவில் துவக்கி மறுபிரவேசத்தை மேற்கொண்டது. டுகாட்டியின் மோட்டார்சைக்கிள்கள், 7 லட்சம் ரூபாய் முதல் 55 லட்சம் ரூபாய்க்கும் இடையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 12 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய்க்கும் இடையிலான விலை கொண்ட மாடல்களுக்கு தான் அதிகப்படியான டிமான்ட் நிலவுகிறது.

விலை;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் 16,15,460 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலையிலும், டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் குருஸர் மோட்டார்சைக்கிள், 18,80,183 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Italian motorcycle manufacturer Ducati recently launched their cruisers - XDiavel and XDiavel S in India. Now, both these cruisers are launched in Bangalore. While speaking of electronics, both these motorcycles feature, Ducati Power Launch (DPL), Ducati Traction Control (DTC), cornering ABS from Bosch, riding modes, keyless ignition, cruise control etc. To know more about XDiavel, check here...
Please Wait while comments are loading...

Latest Photos