இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நாளை அறிமுகம்

Written By:

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான டார்க், செப்டம்பர் 30-ஆம் தேதி (நாளை) அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது. எலக்ட்ரிக் வாகனங்களின் உபயோகம், உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மாசு உமிழ்வு பிரச்னை மிகவும் குறைவாக இருப்பதன் காரணமாக, இவற்றின் பிரயோகம் கூடி கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான டார்க்கின் அறிமுகம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அமோக வளர்ச்சி;

எலக்ட்ரிக் டூ-வீலர்களின் வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 22,000 எலக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகியுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும், 40% வளர்ச்சியை குறிக்கிறது.

நிறுவனங்களின் பங்கு;

எலக்ட்ரிக் டூ-வீலர்களின் வளர்ச்சிக்கு ஸ்டார்ட்டப்ஸ் எனப்படும் துவக்க நிலை நிறுவனங்களான பெங்களூருவின் ஏதர் எனர்ஜி, கோயம்புத்தூரை மையமாக கொண்டு இயங்கும் ஆம்பயர், ஐஐடி கரக்பூரை சேர்ந்த ஆரோ ரோபோட்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம் மற்றும் விற்பனை பெரிய பங்கு ஆற்றியுள்ளது.

அறிமுகம்;

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான டார்க்-கின் அறிமுகம் தான் இந்தியாவில் தற்போது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அறிமுகமாக உள்ளது. டார்க் மோட்டார்சைக்கிள், செப்டம்பர் 30-ஆம் தேதி (நாளை) அறிமுகம் டெக்ஸ்பார்க்ஸ் 2016 (TechSparks 2016) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டி6எக்ஸ்;

டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள், டி6எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம். ரேசிங் தன்மைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், டி6எக்ஸ் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

உச்சபட்ச வேகம்;

இந்த டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளில், அதிகப்படியாக ஒரு மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் செல்ளும் திறன் கொண்டுள்ளது.

விற்பனைக்கு அறிமுகம்;

பூனேவை மையமாக கொண்டு இயங்கும் டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், டி6எக்ஸ் என்ற இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை, அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளனர்.

அனுபவம்;

டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், 500 டி6எக்ஸ் பைலட் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க உள்ளனர். விருப்பப்படும் வாடிக்கையாளர்கள், இந்த மோட்டார்சைக்கிள்களை பூனே, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய மையங்களில் உள்ள டார்க் எக்ஸ்பீரியன்ஸ் ஸோன்களில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம்.

புரோட்டோடைப்;

டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், ரேசிங் சர்க்யூட்டில் புரோட்டோடைப் மாடல்களை வடிவமைத்து கொண்டிருந்தனர். அப்போது தான், இந்த டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள் உருவாக்கம் பெற்றது.

சிறப்பம்சம்;

டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளை 2015 உருவாக்க துவங்கினர். டி6எக்ஸ் மோட்டார்சைக்கிள் தான் மிக அதிகமான ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Pune-based Electric Motorcycle manufacturing company Tork Motorcycles will launch T6X- India's first electric motorcycle at TechSparks 2016 on September 30th, 2016. T6X Motorcycle offers 100km/h of top speed. Tork Motorcycles will produce 500 T6X pilot bikes and customers will be offered test drive experience at three Tork experience zones in Pune, Bengaluru, and Delhi. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos