புதிய ஹீரோ அச்சீவர் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம் - முழு விபரம்!

Written By:

புதிய ஹீரோ அச்சீவர் 150 பைக் டெல்லியில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டிசைன் மாற்றங்கள், மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய மாடலை ஹீரோ நிறுவனம் களமிறக்கி இருக்கிறது.

புதிய ஹீரோ அச்சீவருடன் சேர்த்து அதன் ஸ்பெஷல் எடிசன் மாடலும் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பைக்குகளில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த சற்று விரிவானத் தகவல்கள், விலை உள்ளிட்ட விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

டிரம் பிரேக், டிஸ்க் பிரேக் என இரண்டு மாடல்களில் புதிய ஹீரோ அச்சீவர் பைக் வந்துள்ளது. டிரம் பிரேக் மாடல் ரூ.61,800 விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.62,800 விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இவை டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கூர்மையான தோற்றம் கொண்ட ஹெட்லைட், வலிமையான தோற்றமுடைய பெட்ரோல் டேங்க், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் போன்றவை இந்த பைக்கிற்கு கவர்ச்சி தரும் அம்சங்கள். சற்றே நீளமான இருக்கை அமைப்பை கொண்டுள்ளது. அலாய் வீல்கள் கருப்பு வண்ணத்தில் பைக்கின் கவர்ச்சிக்கு துணை புரிகின்றன.

புதிய ஹீரோ அச்சீவர் பைக்கில் இருக்கும் 149.2சிசி எஞ்சின் அதிகபட்சம் 13.4 பிஎச்பி பவரையும், 12.80 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின் பிஎஸ்-4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது.

முதல்முறையாக 150சிசி ரகத்தில் எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்தை இந்த பைக்கில் அறிமுகம் செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். அதாவது, குறிப்பிட்ட வினாடிகள் தொடர்ந்து பைக் நின்றுகொண்டிருந்தால் எஞ்சின் தானாக அணைந்துவிடும். கிளட்ச்சை பிடிக்கும்போது எஞ்சின் உயிர்பெற்றுவிடும். இதன்மூலமாக, கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற வழி கிடைக்கும்.

இந்த பைக் 0 - 60 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது. இந்த பைக்கின் டிஸ்க் பிரேக் மாடலில் 240மிமீ விட்டமுடைய டிஸ்க்குடன் கூடிய பிரேக் சிஸ்டம் முன்சக்கரத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ட்யூப்லெஸ் டயர்கள், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர் போன்றவையும் முக்கியமானவை. பேந்தர் பிளாக் மெட்டாலிக், கேண்டி பிளேசிங் ரெட் மற்றும் எபோனி கிரே மெட்டாலிக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

லிமிடேட் எடிசன்

புதிய ஹீரோ அச்சீவர் பைக்கின் லிமிடேட் எடிசன் மாடலும் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 70 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதை கொண்டாடும் விதத்தில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிரத்யேக வண்ணக் கலவையில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்கும். மொத்தம் 70 பைக்குகள் மட்டுமே இந்த லிமிடேட் எடிசன் மாடலில் கிடைக்கும் என்பதால், உடனே முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

ஹோண்டா யூனிகார்ன் 150, பஜாஜ் வி15 போன்ற பைக் மாடல்களுக்கு இந்த புதிய ஹோண்டா அச்சீவர் 150 பைக் போட்டியாக இருக்கும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Hero MotoCorp, the world's largest two-wheeler manufacturer has launched the all-new Achiever 150 commuter motorcycle in India. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos