ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் கொல்கத்தாவில் அறிமுகம்

Written By:

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், தங்கள் ரேஞ்ச்சின் அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் கொல்கத்தாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் பிரிவு ஆகும். ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் கீழ் ஏராளமான வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாடல்கள் தொடர்புடைய செய்திகளை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ மோட்டோகார்ப்...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியாவில் முன்னோடி டூ வீலர் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம், 2020-ஆம் ஆண்டிற்குள் சுமார் 3 மில்லியன் வாகனங்களை இந்தியாவில் 3 மில்லியன் வாகனங்களை விற்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், ஆப்டிமா, நிக்ஸ் மற்றும் மேக்ஸி உள்ளிட்ட ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

பேட்டரி தேர்வுகள்;

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு லெட் பேட்டரி அல்லது லித்தியம் பேட்டரி கொண்ட மாடல்களில் இருந்து பிடித்தவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். லித்தியம் பேட்டரி தொழில்நுட்பம், 5-ஆண்டுகளுக்கு பெட்ரோல் செலவில்லாத போக்குவரத்து அளிகிறது. மேலும், 30 நிமிட டாப்-அப் சார்ஜிங்கோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் இத்தகைய ஸ்கூட்டர்களை வீட்டிலேயும் சார்ஜிங் செய்து கொள்ளலாம்.

சிஇஒ கருத்து;

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ-வாக உள்ள சோஹிந்தர் கில், ஆப்டிமா லித்தியம் டீலக்ஸ் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த சார்ஜ் 4 முதல் 5 மணி நேரம் வரை நீடிப்பத்தொடு மட்டுமல்லாமல், 65 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது. ஆப்டிமா லித்தியம் டீலக்ஸ் ஸ்கூட்டரில் அதிகப்படியாக ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

பேடிஎம் உடனான ஒப்பந்தம்;

புக்கிங் தொடர்பான விஷயத்தில், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், பேடிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, அரசு வழங்கும் மாணியங்கள் அல்லாது, 10,000 ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்டிமா டீலக்ஸ் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

ஆப்டிமா ஸ்கூட்டர்களின் புக்கிங் பேடிஎம் இணையதளமான www.paytm.com என்ற இணையதளத்தில், செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

விலை;

முன்னதாக, நிக்ஸ் லித்தியம் (Nyx Lithium) ஸ்கூட்டர், அக்டோபர் 2016 முதல் மேற்கு வங்காளத்தில், 45,790 ரூபாய்க்கு கிடைக்கும். முன்னதாக, பூஜ்ஜியம் மாசுஉமிழ்வு என்ற குறிக்கோளுடன், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், ஆப்டிமா மற்றும் ஃபோடான் உள்ளிட்ட ஸ்கூட்டர்களை 2014-ல் அறிமுகம் செய்தது.

சார்ஜிங் மையங்கள்;

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், பல்வேறு இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைப்பது தொடர்பாக வெவ்வேறு நிறுவனங்களுடனும், மாநில அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறாக, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்வது தொடர்பான கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Hero Electric launched its complete range of electric scooters in Kolkata. Customers will have choice of lead or lithium batteries while purchasing their scooters. Hero Electric tied up with Paytm and will be offering an extra discount of Rs 10,000 in addition to government subsidies. These offers will be for selected customers on Optima Delux Scooter. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos