இந்தியாவின் முதல் லித்தியம் இயான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்கிறது ஹீரோ எலக்ட்ரிக்

By Ravichandran

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், லித்தியம் இயான் பேட்டரி பேக் கொண்ட ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது. ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் என்பது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பிரிவு ஆகும்.

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் ஏராளமான வாகனங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் அலுவல் ரீதியான இணையதளத்தில், ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் விரைவில் வெளியாகிறது ("Coming Soon") என்ற அர்த்தத்தில் தகவல் வெளியாகியது.

hero-electric-optima-dx-scooter-lithium-ion-battery-pack-coming-very-soon

இந்த ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அதி நவீன 48V லித்தியம் இயான் பேட்டரி பேக் கொண்டுள்ளது. இதன் எலக்ட்ரிக் மோட்டார், 250 வாட் பிஎல்டிசி (250 Watt BLDC) அவுட்புட் கொண்டுள்ளது.

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 65 கிலோமீட்டர் என்ற அளவிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், உச்சபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் இ-பைக், புளு மற்றும் மெரூன் என 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், டியூப்லெஸ் டயர்கள், டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், உயர்தர பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம், மொபைல் சார்ஜிங் வசதி மற்றும் ஜிபிஎஸ் கம்பேட்டிபிளிட்டி உள்ளிட்ட ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.

ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வேறு சில ஆதாயங்களும் உள்ளன. இந்த ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இயக்கும் ரைடர்களுக்கு டிரைவர் லைசன்ஸ் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹீரோ ஆப்டிமா டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், வரும் வாரங்களில் இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero Electric would launch India’s 1st Lithium-Ion battery pack powered Hero Electric Optima DX Electric Scooter. It has very powerful 48V Advanced Li-Ion battery pack, which is used in Optima DX. Hero Optima DX Electric is available in two colour options - Blue and Maroon. Owner/Rider needs not have driver's license to commute on this electric scooter. To know more, check here...
Story first published: Monday, June 20, 2016, 17:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X