புதிய ஹீரோ கரிஷ்மா பைக் விரைவில் அறிமுகம் செய்யப்படும்

By Ravichandran

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் கரிஷ்மா பைக்கிற்கு பொலிவு கூட்டி புதிய வடிவில் விரைவில் வெளியிட உள்ளனர். சில தயாரிப்புகள் ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அவை தனிப்பட்ட முறையில் ஹிட்டாவதில்லை. அந்த வகையில், ஹீரோ கரிஷ்மா பைக்கும் ஒன்றாகும்.

ஹீரோ கரிஷ்மா பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கரிஷ்மா பைக்...

கரிஷ்மா பைக்...

2-ஸ்ட்ரோக் பைக்குகளின் பரிமாணத்திற்கு பிறகு, இந்தியாவை சேர்ந்த ஹீரோ நிறுவனம் தயாரிக்கும் கரிஷ்மா பைக் தான் முதன்மையான செயல்திறன் ராஜா (performance king) போல திகழ்ந்தது. இது, ஹீரோ ஹோண்டா (தற்போது ஹீரோ மோட்டோகார்ப்) நிறுவனத்திற்கு பிரிமியம் பைக் உற்பத்தியாளர் என்ற வகையில் பெரிய அந்தஸ்த்தை பெற்று தந்தது.

கடுமையான போட்டி;

கடுமையான போட்டி;

கரிஷ்மா பைக்கிற்கு, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் பல்சர் 220 தான் கடுமையான போட்டியாக விளங்கியது. இவற்றை பற்றி தீராத பட்டிமன்றங்கள் கூட நிகழ்ந்து வந்தன.

சரிவை நோக்கி...

சரிவை நோக்கி...

கடந்த சில ஆண்டுகளாக, கரிஷ்மா பைக், இந்திய வாகன சந்தைகளில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2014 அறிமுகம் செய்யப்பட்ட மாடல், இபிஆர் (EBR-inspired) பிரபாவம் கொண்ட வடிவம் ஆகும்.

விற்பனை ஒப்பீடு;

விற்பனை ஒப்பீடு;

ஏப்ரல் 2016 முதல் ஆகஸ்ட் 2016 வரை கரிஷ்மா (ஆர் மற்றும் இசட்எம்ஆர்) பைக்குகளின் விற்பனை வெறும் 242 என்ற அளவில் தான் இருந்தது. 2015-ஆம் ஆண்டு முழுவதும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெறும் 2,328 கரிஷ்மா பைக்குகளை தான் விற்பனை செய்ய முடிந்தது. ஆனால், கரிஷ்மா பைக்கின் போட்டி மாடலான பல்சர் மாடல், 2,328 கரிஷ்மா பைக்குகள் என்ற ஒரு ஆண்டின் விற்பனை அளவிற்கு கூடுதலாக, ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது.

ஆகஸ்ட் 2015 விற்பனை;

ஆகஸ்ட் 2015 விற்பனை;

ஆகஸ்ட் 2015-ல், ஹீரோ நிறுவனம், வெறும் 333 கரிஷ்மா பைக்குகளை தான் விற்பனை செய்தது. குறைந்து வரும் விற்பனையின் காரணமாக, ஹீரோ நிறுவனம், இந்த கரிஷ்மா பைக்கை விற்பனையில் இருந்து விலக்கி கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

உயர்அதிகாரி கருத்து;

உயர்அதிகாரி கருத்து;

bikeadvice.in என்ற நிறுவனத்திற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிடிஓ எனப்படும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (Chief Technology Officer) மார்கஸ் பிரான்ஸ்பர்கர் பேட்டி அளித்தார். அதில், அவர் "இந்த கரிஷ்மா பைக்கை, அழிந்து விட மாட்டோம்" என தெரிவித்தார். மேலும், அவர் "இந்த ஹீரோ கரிஷ்மா பைக்கின் குறைந்து வரும் மகத்துவம் அனைவருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பிரமியம் பைக் செக்மென்ட்டில் நாங்கள் தான் முதலில் நுழைந்தோம். குறிப்பிட்ட காலம் வரை நல்ல வெற்றியும் பெற்றோம். வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல அங்கீகாரத்தையும் பெற்றோம். இந்த கரிஷ்மா பிராண்ட் நிச்சயம் இருக்கும். எங்களுக்கு கொஞ்ச காலம் கொடுங்கள். நாங்கள், அனைத்து கரிஷ்மா பைக் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த காத்துக்கிடக்கிறோம்" என மார்கஸ் பிரான்ஸ்பர்கர் கூறினார்.

புதிய மாடல்;

புதிய மாடல்;

bikeadvice.in என்ற நிறுவனம் வெளியிட்ட உள்ள செய்தி படி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆர் அன்ட் மையம் புதிய கரிஷ்மா பைக்கை உருவாக்கும் பணிகளில் இறங்க உள்ளது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

அக்டோபரில் சேவைக்கு வரும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில்: படங்களுடன் தகவல்கள்!

ஆங்கிலேயரின் காவலில் இருந்து தப்பிக்க நேதாஜி பயன்படுத்திய காரை புதுப்பிக்கும் ஆடி!

துபாயில் டிரைவரில்லா பஸ் சோதனை ஓட்டம்!

Most Read Articles
English summary
News Reports makes rounds that, Hero MotoCorp will Revamp the Karizma Brand. Karizma was first performance king after two-stroke era. Mr Markus Braunsperger, Chief Technology Officer at Hero MotoCorp said they will not let the Karizma brand die. According to bikeadvice.in's report, Hero's R & D are planning to make new Karizma soon. To know more, check here...
Story first published: Saturday, October 1, 2016, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X