வருகிறது பவர்ஃபுல் ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டர் !

By Saravana

ஸ்கூட்டரையும், பைக்கின் அம்சங்களையும் கலந்து கட்டி உருவாக்கப்பட்ட ஹோண்டா நவி என்ற கலப்பின வகை ஸ்கூட்டர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 5,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், இளைஞர்களை கவரும் விதத்தில் கூடுதல் சக்தி கொண்ட புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய பெயர்

புதிய பெயர்

புதிய மாடல் ஹோண்டா நவி கோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் தோற்றத்தில் எந்த மாறுதல்களும் இருக்காது. ஆனால், கூடுதல் சக்தி கொண்ட எஞ்சின் பொருத்தப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டர் 110சிசி எஞ்சினுடன் கிடைக்கிறது. ஆனால், புதிய ஹோண்டா நவி கோ ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 10.12 என்எம் டார்க்கையும் வழங்கும்.

வேகம்

வேகம்

புதிய ஹோண்டா நவி கோ ஸ்கூட்டரில் வி-மேட்டிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இது அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் போன்றவை கூடுதலாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கஸ்டமைஸ் ஆப்ஷன்

கஸ்டமைஸ் ஆப்ஷன்

தோற்றத்தில் அதிக மாறுதல்கள் இல்லாவிட்டாலும், புதிய ஹோண்டா நவி கோ ஸ்கூட்டருக்கு பல்வேறு விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை ஹோண்டா வழங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.60,000 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹோண்டா நவி கோ ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
The Honda Navi has received 5000 unit bookings since its launch. The young generation has really taken to the popularity of the Hondo Navi as the most suitable scooter. Now Honda wants to give the Navi more power.
Story first published: Friday, May 27, 2016, 9:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X