புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

புதிய இந்தியன் சீஃப்டெயின் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் உயர்வகை மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு இந்தியாவில் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனை மனதில் கொண்டு புதிய மாடல்களை அந்த நிறுவனம் இறக்கி வருகிறது.

சமீபத்தில் ஸ்பிரிங்ஃபீல்டு என்ற புதிய மோட்டார்சைக்கிளை களமிறக்கிய இந்தியன் நிறுவனம் இன்று மற்றுமொரு புதிய மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாடல் விபரம்

இந்தியன் சீஃப்டெயின் டார்க் ஹார்ஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பல சிறப்பம்சங்களை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கிறது.

கருப்பு அலங்காரம்

இந்த மோட்டார்சைக்கிள் முழுவதும் கருப்பு வண்ண பாகங்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் பவர் விண்ட் ஷீல்டு, முக்கிய ஹெட்லைட் மற்றும் இரண்டு துணை ஹெட்லைட்டுகள், ஒருவர் பயணிப்பதற்கான வசதியான சொகுசான இருக்கை, அலாய் வீல்களுடன் கவர்கிறது.

வசதிகள்

நீண்ட தூரம் ஆக்சிலரேட்டரை கொடுக்காமலேயே சீரான வேகத்தில் இயக்கக்கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், திறன் வாய்ந்த மியூசிக் சிஸ்டம், சாவி இல்லாமல் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி என சொகுசு கார்களுக்கு இணையான பல சிறப்பம்சங்களை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கிறது.

எஞ்சின் விபரம்

இந்த மோட்டார்சைக்கிளில் 1811சிசி தண்டர்ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 73 பிஎச்பி பவரையும், 139 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

அலுப்பில்லாத பயணம்

நீண்ட தூர பயணங்களுக்கு அலுப்பில்லாத வகையில் பெரிய ஃபுட்ரெஸ்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் உடைமைகளை வைத்து எடுத்துச் செல்வதற்கான இரண்டு பெட்டிகள் உள்ளன.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இந்த மோட்டார்சைக்கிளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. இந்தியன் சீஃப்டெயின் குடும்ப வரிசையில் மிகவும் காஸ்ட்லியான மோட்டார்சைக்கிளாக விற்பனைக்கு வந்துள்ளது.

விலை விபரம்

ரூ.31.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய இந்தியன் சீஃப்டெயின் டார்க் ஹார்ஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Polaris India has launched the Indian Chieftain Dark Horse cruiser motorcycle in the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X