இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் புதிய 2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

தற்போது அறிமுகம் ஆகியுள்ள இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் தொடர்பான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள்...

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள்...

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், இத்தாலியின் மிலன் என்ற இடத்தில் நடைபெற்ற 2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் முதன் முதலாக சர்வதேச அளவில் காட்சிபடுத்தபட்டது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி தான், இந்திய அளவில் இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வழங்கும், மிக விலை குறைந்த மாடல் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், 999 சிசி, லிக்விட்-கூல்ட், வி-ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 78 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 88.8 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தான் ரியர் வீலுக்கு பவர் கடத்தபடுகிறது.

விலை குறைந்த வாகனம்;

விலை குறைந்த வாகனம்;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் தான், இந்தியாவிலும், உலக அளவிலும், இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வழங்கும் மிகவும் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் ஆகும்.

ஆக்சஸரீஸ்;

ஆக்சஸரீஸ்;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், ஏராளமான ஆக்சஸரீஸ் தேர்வுகளுடன் வெளியாகிறது.

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஹேண்டில்பார்கள் முதல் சேட்டல்பேக் ஏராளமான பிரத்யேகம் மிக்க ஆக்சஸரீஸ்களை வழங்குகின்றனர்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகளில் மொத்தம் 3 நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், பியர்ல் வைட், தண்டர் பிளாக் மற்றும் இந்தியன் ரெட் ஆகிய வண்ணங்களில் வழங்கபடுகிறது.

எம்டி கருத்து;

எம்டி கருத்து;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யபடுவது குறித்து, இதன் மேனேஜிங் டைரக்டர் பங்கஜ் தூபே மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

"இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், நிச்சயம் இந்தியன் ஸ்கவுட் பாரம்பரியத்தை கட்டி காக்கும் வகையில் உள்ளது.

இலகுவான எடை கொண்டு, நல்ல பேலன்ஸ் கொண்டுள்ள இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், இந்தியா மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய சந்தைகளில், இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யபடுவதனால், எங்கள் வாகனங்களின் விற்பனையும் அதிக அளவில் கூடும்" என பங்கஜ் தூபே தெரிவித்தார்.

விற்கபடும் விதம்;

விற்கபடும் விதம்;

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அனைத்து குருஸர் மோட்டார்சைக்கிள்களும், சிபியூ எனப்படும் கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் (முழுவதுமாக உற்பத்தி செய்து முடிக்கபட்ட) வகையிலேயே வழங்கபட உள்ளது.

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டியும், சிபியூ வடிவிலேயே இந்தியாவில் கிடைக்க உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், வரும ஜுலை முதல் இந்திய வாகன சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை;

விலை;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள், 11.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியா வருகிறது!

ரூ.14 லட்சத்தில் இந்தியன் ஸ்கவுட் வாங்கிய நடிகர் புனித் ராஜ்குமார்!

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Indian Motorcycle has launched their Indian Scout Sixty motorcycle in India. Indian Scout Sixty is the most affordable model offered by Indian Motorcycle in India and around the World. It is priced at Rs. 11.99 lakh ex-showroom (Delhi). Indian Scout Sixty is available in 3 colours in the Indian market, namely - Pearl White, Thunder Black, and Indian Red. To know more, check here...
Story first published: Tuesday, May 24, 2016, 18:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X