டீலர் செய்த மோசடி காரியத்துக்கு பிராயசித்தம் செய்த கவாஸாகி!

தனது அங்கீகரிக்கப்பட்ட மும்பை டீலரால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பைக்குகளை டெலிவிரி கொடுத்துள்ளது கவாஸாகி. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

நவி மும்பையில் செயல்பட்டு வந்த கவாஸாகி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பால்ம் பீச் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. முன்பணம் கொடுத்து முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பலருக்கு குறித்த நேரத்தில் பைக்குகளை டெலிவிரி செய்யாமல் இழுத்தடித்தது.

இது வாடிக்கையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. வாடிக்கையாளர்களின் நெருக்கடி மற்றும் புகார்களால், பால்ம் பீச் ஷோரூமின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இந்த சூழலில் கவாஸாகி நிறுவனம் நல்ல காரியத்தை செய்து தனது பெயரை காப்பாற்றிக் கொண்டுள்ளது.

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களில் சென்னையை சேர்ந்தவர்களும் உண்டு. அதில் ஒருவர் அந்த டீலரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெமோ பைக்கை வலுக்கட்டாயமாக டெலிவிரி பெற்று வந்துவிட்டார். இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் செய்தியும் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், மும்பை டீலரின் அங்கீகாரத்தை கவாஸாகி இந்தியா நிறுவனம் ரத்து செய்தது. பல லட்சம் முன்பணம் கொடுத்து, டீலரால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

பல லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்து பைக் டெலிவிரி கிடைக்குமா என்ற கவலையில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு முடிவு கிடைத்துவிட்டது. 

ஆம். டீலரால் ஏமாற்றப்பட்ட 12 வாடிக்கையாளர்களுக்கும் கவாஸாகி இந்தியா நிறுவனம் பைக்குகளை டெலிவிரி கொடுத்துள்ளது. 

இதனை டிவிட்டர் மூலமாக உறுதி செய்திருக்கிறது. அதில், டெலிவிரி பெற்ற சில உரிமையாளர்களின் படங்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. மிக நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த வாடிக்கையாளர்கள் கவாஸாகி நிறுவனத்தின் நடவடிக்கையால் பைக்குகளை டெலிவிரி பெற்றுள்ளனர்.

கவாஸாகி இசட்800, இசட்800 சுகோமி எடிசன், இசட்எக்ஸ்10ஆர், வெர்சிஸ் 1000 மற்றும் நின்ஜா 1000 ஆகிய பைக் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மும்பை டீலர் மீதும், கவாஸாகி நிறுவனம் மீதும் கொடுக்கப்பட்டிருந்த புகார்களை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் வாபஸ் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மையையும், நன்மதிப்பையும் காத்துக் கொள்ளும் பொருட்டு இந்த நடவடிக்கையை கவாஸாகி நிறுவனம் செய்துள்ளது.

ஒருவழியாக, தங்களுக்கு விருப்பமான பைக்குகளை டெலிவிரி பெற்ற மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களின் முகத்தில் காண முடிந்தது. மூடப்பட்ட பால்ம் பீச் டீலருக்கு பதிலாக புதிய டீலரை நியமிக்கும் முயற்சிகளில் கவாஸாகி இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, October 20, 2016, 10:56 [IST]
English summary
Kawasaki India Provides Relief To Customers Cheated By Mumbai Dealership. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos