கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி200, ஆர்சி390 சூப்பர்ஸ்போர்ட் புதிய வண்ணத்தில் அறிமுகம்

Written By:

கேடிஎம் நிறுவனம், தங்களின் ஆர்சி200 மற்றும் ஆர்சி390 சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்களை புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, இந்த 2 மோட்டார்சைக்கிள்களும் ஒரே ஒரு வண்ண தேர்வில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக மற்றொரு வண்ணத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் ஆர்சி200, ஆர்சி390 சூப்பர்ஸ்போர்ட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

2017 மேம்பாடுகள்;

2017-ஆம் ஆண்டிற்கான மேம்பாடுகலின் ஒரு பகுதியாகவே ஆர்சி200 மற்றும் ஆர்சி390, கூடுதலாக மற்றொரு சிங்கிள் நிற தேர்வில் கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், இதன் சைட் பேனல்களில் வைட் நிறம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் மோட்டார்சைக்கிளில் தனித்து தெரியும் வகையில் தங்களின் டிரேட்மார்க் ஆரஞ்ச் நிறத்தை சேர்த்துள்ளனர்.

பிற மேம்பாடுகள்;

இதை தவிர, கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி200 மற்றும் ஆர்சி390 மோட்டார்சைக்கிள்களில், நிறத்தை தவிர்த்து டியூவல் சேனல் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொறுத்தப்பட்டுள்ளது.

தோற்றம்;

கேடிஎம் ஆர்சி390, இந்த பிரத்யேகமான 3 நிறங்களின் கலவையில் இன்னும் ஸ்போர்ட்டியாக காட்சி அளிக்கிறது. கேடிஎம் நிறுவனம், இந்த ஆர்சி390 மோட்டார்சைக்கிளுக்கு கிளாஸ்ஸி பிளாக், வைட் மற்றும் ஆரஞ்ச் பெயின்ட் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது.

இதர மாற்றங்கள்;

கேடிஎம் ஆர்சி390 மோட்டார்சைக்கிளில், யூரோ4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமான புதிய சைட்-மவுண்டட் எக்ஸ்ஹாஸ்ட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்த 2 நிறங்களின் தேர்வுகளும், கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பொருள் யாதெனில், இந்த ஆர்சி200 மற்றும் ஆர்சி390 மோட்டார்சைக்கிள்கள் புதிய நிறத்தில் விரைவில் வெளியாகலாம் என்பதாகும். கேடிஎம் இந்தியாவிற்கான மாடல்கள், இந்த நிற மேம்பாடுகளுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் ஆர்சி125;

கேடிஎம் ஆர்சி125 மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. இது வளர்ந்த நாடுகளின் சந்தைகளுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. கேடிஎம் ஆர்சி125 மோட்டார்சைக்கிளிலும் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. கேடிஎம் ஆர்சி125 மோட்டார்சைக்கிளுக்கு அதிக ஆரஞ்ச் நிறமும், குறைந்த அளவிலான வைட் மற்றும் பிளாக் நிறங்கள் வழங்கப்படுகிறது. கேடிஎம் நிறுவனம், இந்த ஆர்சி125 மோட்டார்சைக்கிளுக்கு சைட் மவுண்டட் எக்ஸ்ஹாஸ்ட்டையும் வழங்கியுள்ளனர்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM had initially launched its RC200 and RC390 supersport models with single colour option. Now, Austrian-based two-wheeler manufacturer will provide RC200 and RC390 models with single new colour options as part of 2017 update. RC125 also gets an overhaul with more Orange and very little White and Black colours. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos