எலெக்ட்ரிக் பைக் பேட்டரி பிரச்னைக்கு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த கவாஸகி...

By Meena

ஜப்பானின் பக்கா மாஸ் பைக் நிறுவனம் கவாஸகி. அதன் தயாரிப்பில் வெளியான நிஞ்சா உள்ளிட்ட பல மாடல்கள் சர்வேத அளவில் செம ஹிட். அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் என பல நாடுகளில், தனது உற்பத்தி நிலையங்களைத் தொடங்கிய கவாஸகி, இளைஞர்கள் - நடுத்தர வயதினர் என அனைத்துத் தரப்பினருக்குமான ஸ்போர்ட்டி வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனம்.

சமீப காலமாக அதன் எலெக்ட்ரிக் பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி அதிகமாக வெப்பமாவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உலக அளவில் நற்பெயருடன் விளங்கும் கவாஸகிக்கு இப்படியொரு சோதனை உருவானதால், உடனடியாக அதனை நிவர்த்தி செய்ய ஆயத்தமானது அந்நிறுவனம். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிபுணர் குழுவை அமைத்து, ஆராய்ச்சி எல்லாம் செய்து ஒருவழியாக தற்போது அந்தப் பிரச்னைக்குத் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டது கவாஸகி.

கவாஸாகி பைக்

அதுதொடர்பான செயல் திட்ட வரைபடம் தற்போது வெளியாகி இருப்பதே அதற்கு சான்றாக அமைந்துள்ளது.

அதாவது, பேட்டரிகள் அதிக வெப்பமடையும்போது அதனை தணிப்பதற்கான டெக்னாலஜியை கவாஸகி தற்போது வடிவமைத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் சிறிய லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சினில் வெளிப்படுத்தும் ஆற்றலுக்கு நிகரான திறன் கவாஸகி மாடல் பைக்குகளில் கிடைக்குமாம்.

வரைபடத்தை ஆய்வு செய்ததில், பைக்கில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டாரின் இருபக்கமும் கூலிங் சிஸ்டத்தைப் பொருத்த கவாஸகி நிறுவனம் திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிய வருகிறது.

இந்த கூலிங் சிஸ்டங்களானது, பேட்டரி அதிக அளவில் வெப்பமாகாமல் தவிர்க்க உதவுகிறது. மேலும் சிறிய மின்விசிறி போன்ற கட்டமைப்பு அதில் பொருத்தப்பட்டிருப்பதால், அதிலிருந்து வெளியாகும் காற்று நேரடியாக பேட்டரியின் வெளிப்புறத்தில் படும்.

இதனால், தற்போது உள்ள கவாஸகி எலெக்ட்ரிக் மோட்டர்களைப் போல இது அதிக வெப்பமாகாது. இந்த டெக்னாலஜி தொடர்பான வரைபடம் வெளியானபோதிலும், அதைப் பயன்படுத்தினால் எந்த அளவு ஆற்றல் பைக்கிலிருந்து வெளிப்படும் என்பது குறித்த சரியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இதனிடையே, கவாஸகி பைக்குகளின் பேட்டரி சூடாகும் பிரச்னைக்கு மாற்றாக பெட்ரோல் எஞ்சின் மாடல்களைக் களமிறக்க அந்நிறுவனம் தயாராகி வருவதாக புதிய ஊகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அவை வெறும் வதந்தி என்று திட்டவட்டமாக மறுத்த கவாஸகி நிர்வாகிகள், அப்படியொரு எண்ணமோ, திட்டமோ இதுவரை எங்களுக்கு இல்லை என்றனர். எப்படியோ, கவாஸகி ஸ்போர்ட்டி பைக்குகளை விரும்பும் நபர்களுக்கு, இந்தப் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகவே இருக்கும்.

Most Read Articles
English summary
Leaked! Kawasaki’s Master Plan For An Insanely Fast Electric Motorcycle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X