புதிய மஹிந்திரா கம்யூட்டர் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கம்யூட்டர் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது. இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம், ஆட்டோமொபைல் துறையில் பெரிய ஜாம்பவானாக விளங்கி வருகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்களின் நம்பிக்கை தொடர்ந்து கிடைத்து வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் , புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம், 155 சிசி கொள்ளளவு கொண்ட புதிய கம்யூட்டர் பைக்கை உருவாக்கி வருகின்றனர். இதன் ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியது.

மஹிந்திராவின் புதிய கம்யூட்டர் பைக் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

சமீபத்தில், புதிய மஹிந்திரா கம்யூட்டர் பைக்கின் சோதனைகள் எந்த விதமான உருமறைப்பும் இன்றி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள், இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மஹிந்திரா கம்யூட்டர் பைக்கிற்கு, 155 சிசி கொள்ளளவு கொண்ட இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா இஞ்ஜினியர்கள், இந்த பைக்கின் இஞ்ஜின், பிஎஸ்4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமானதாக இருப்பதை உறுதி செய்து வருகின்றனர்.

பிஎஸ்4 இஞ்ஜின்;

பிஎஸ்4 இஞ்ஜின்;

ஏப்ரல் 1, 2016 முதல், இந்தியாவின் அனைத்து விதமான டூ வீலர்களும், மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய அரசு, இந்தியா முழுவதும் ஏற்படும் மாசு உமிழ்வை குறைக்கும் பொருட்டு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விவரக்குறிப்புகள்;

விவரக்குறிப்புகள்;

புதிய மஹிந்திரா கம்யூட்டர் பைக்கின், விவரக்குறிப்புகள் அல்லது செயல்திறன் அல்லது வேறு எந்த விதமான கூடுதல் தகவல்களும் இது வரை வெளியாகவில்லை.

தோற்றம்;

தோற்றம்;

ஸ்டைலிங் பொருத்த வரை, புதிய மஹிந்திரா கம்யூட்டர் பைக் மிக எளிமையான தோற்றம் கொண்டுள்ளது.

எந்த விதமான அநாவசியமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாத இந்த பைக், ரெட்ரோ டூ வீலர் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.

கூடுதல் அம்சங்கள்;

கூடுதல் அம்சங்கள்;

புதிய மஹிந்திரா கம்யூட்டர் பைக்கின் அனைத்து கூறுகளும் உதிரி பாகங்களும், செலவுகளை கட்டுக்குள் வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம், இந்த கம்யூட்டர் பைக்கிற்கு பல்வேறு கூடுதல் அம்சங்களை, தேர்வு முறையில் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

குறிக்கோள்;

குறிக்கோள்;

தற்போதைய நிலையில், மஹிந்திரா நிறுவனம், சென்ட்யூரோ மற்றும் மோஜோ ஆகிய மோட்டார்சைக்கிள்களை இந்திய வாகன சந்தைகளில் வழங்கி வருகிறது.

இந்த புதிய பைக்கானது, சென்ட்யூரோ மற்றும் மோஜோ ஆகிய 2 வீலர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய மஹிந்திரா கம்யூட்டர் பைக், 2016-இறுதியிலோ அல்லது 2017-ஆம் ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், க்ரிம்ஸன் மேட் வண்ணத்தில் விரைவில் அறிமுகம்

மோஜோ தொடர்புடைய செய்திகள்

செஞ்சூரோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Picturs Credit ; Thrustzone

Most Read Articles
English summary
All-New Mahindra Commuter Bike Spy Pics were revealed ahead of its Launch. Recently, an all-new 155cc commuter Bike from Mahindra & Mahindra was spied testing without camouflage. New commuter Bike will sport 155cc engine. Mahindra engineers will make sure that, this new engine is BS4 compliant. Mahindra's new commuter bike looks simplistic. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X