மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம் - புக்கிங் துவங்கியது

Written By:

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதை ஒட்டி, அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஏதாவது அறிமுகங்களை வெளியிடும் நடவடிக்கைகள் அல்லது மேம்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மஹிந்திரா டூ வீலர்ஸ் லிமிடெட் அல்லது எம்டிடபுள்யூஎல் (Mahindra Two Wheelers Ltd. (MTWL)) என்று அழைக்கப்படும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்கள் தொடர்புடைய தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புக்கிங்;

மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்களையும், இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் பேமன்ட் மற்றும் இணைய வழி விற்பனை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் www.paytm.com என்ற இணையதளத்தில் மட்டுமே பிரத்யேகமாக புக்கிங் செய்ய முடியும். மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்களை, 5,000 ரூபாய் புக்கிங் கட்டணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

வண்ணங்கள்;

மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்கள், ஃபெசிபிக் மேட புளூ மற்றும் கிரிம்சன் மேட் ரெட் ஆகிய 2 வெவ்வேறு எக்ஸ்டீரியர் நிறங்களில் கிடைக்கிறது. ஆனால், இந்த 2 மாடல்களின் இன்டீரியர்களும், புதிய பீஜ் நிறம் கொண்டுள்ளன.

மெக்கானிகல் மாற்றம்;

வழக்கமான மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரோடு ஒப்பிடுகையில், மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்களில் எந்த விதமான மெக்கானிகல் மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இஞ்ஜின்;

மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்கள், சிங்கிள் சிலிண்டர் உடைய 109.6 சிசி ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 8 பிஹெச்பியையும், 8.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

உயர் அதிகாரி கருத்து;

மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்களின் அறிமுகம் குறித்து இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி நவீன் மல்ஹோத்ரா மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார். மேலும், "புதுமையான ஹைட் அட்ஜஸ்டிபில் சீட், மேம்பட்ட செயல்திறன் மற்றும் பிற புதுமையான அம்சங்கள் கொண்டுள்ளதால், மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டர், ஆன்லைனிலும், ஷோரூம்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. எங்கள் தயாரிப்பிகளின் இணைய வழி விற்பனையை முன்னெடுத்து செல்லும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் 2 ஸ்பெஷல் எடிஷன்களின் அட்வான்ஸ் புக்கிங்கை, பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து வெறும் 5,000 ரூபாய் என்ற புக்கிங் கட்டணத்துடன் மேற்கொண்டு வருகிறோம்" என நவீன் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Mahindra Two Wheelers Ltd. (MTWL) has launched two new special edition variants of Gusto 110 on Paytm. These two special editions can be booked exclusively on commerce platform Paytm. These special edition Gustos can be booked on Paytm for Booking Amount of Rs. 5,000. These two special edition Gustos are available in Pacific Matt Blue and Crimson Matt Red colors...
Please Wait while comments are loading...

Latest Photos