அட்டகாசமான புதிய வண்ணத்தில் மஹிந்திரா மோஜோ பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய வண்ணத்தில் மஹிந்திரா மோஜோ பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் மஹிந்திரா மோஜோ பைக் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. மஹிந்திரா இருசக்கர வாகன பிராண்டுக்கும் நன்மதிப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

தற்போது 3 வண்ணங்களில் மஹிந்திரா மோஜோ பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய வண்ணத்தில் மஹிந்திரா மோஜோ பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வல்கனோ ரெட், சார்கோல் பிளாக் மற்றும் கிளேசியர் ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் இதுவரை கிடைத்து வந்தது. தற்போது சன்பர்ஸ்ட் யெல்லோ என்ற புதிய மஞ்சள் வண்ணம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், ரேடியேட்டர், முன்புற மற்றும் பின்புற ஃபென்டர்கள் மஞ்சள் வண்ணத்திலும், பிற பாகங்கள் கருப்பு வண்ணத்திலும் இருக்கின்றன. வழக்கம்போல் முன்புற ஃபோர்க்குகள் தங்க வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது.

மஞ்சள் மற்றும் கருப்பு என இரட்டை வண்ணக் கலவை மிக பிரகாசமான வண்ணத் தேர்வை விரும்புபவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். அதுதவிர, வேறு அதிக மாற்றங்கள் எதுவும் இல்லை.

மஹிந்திரா மோஜோ பைக்கில் இருக்கும் 295சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 26.45 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மோட்டார்சைக்கிளில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் அமைப்பும் உள்ளது. இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை என்பது துரதிருஷ்டமானது.

ரூ.1.70 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மஹிந்திரா மோஜோ பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Tuesday, November 15, 2016, 10:17 [IST]
English summary
The Mahindra Mojo is now available in Sunburst Yellow paint scheme. In total Mahindra Two Wheelers now offers its Mojo in four colour options.
Please Wait while comments are loading...

Latest Photos