மஹிந்திரா நிறுவனம், பீஜோ ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம்

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம், பீஜோ ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

பீஜோ ஸ்கூட்டர்களை, இந்தியாவில் களமிறக்கும் மஹிந்திராவின் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பீஜோ...

பீஜோ...

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ வாகன தயாரிப்பு குழுமத்தை சேர்ந்த பீஜோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது.

உலகின் மிக பழமையான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பீஜோ சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து, இந்தியாவின் மஹிந்திரா மஹிந்திரா நிறுவனம், பீஜோ நிறுவனத்தின் இரு சக்கர வாகன பிரிவின் பெரும் அளவிலான பங்குகளை வாங்கி, அதை கையகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் பீஜோ;

இந்தியாவில் பீஜோ;

மஹிந்திரா நிறுவனம் பீஜோவை கையகப்படுத்தியதை அடுத்து, பீஜோ ஸ்கூட்டர்களையும், தங்கள் நிறுவன தயாரிப்புகளுடன் சேர்த்து, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிளும் காட்சிபடுத்தபதுத்தியது.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

பீஜோ ஸ்கூட்டர்கள் இந்தியாவில் பிரிமியம் செக்மென்ட்டில் வகைப்படுத்தபடுகிறது. மஹிந்திரா நிறுவனம், பீஜோ ஸ்கூட்டர்கள் அறிமுகத்தின் மூலம் பிரிமியம் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் தடம் பதிக்க உள்ளது.

வெஸ்பாவின் ஆதிக்கம்;

வெஸ்பாவின் ஆதிக்கம்;

தற்போதைய நிலையில், இந்திய வாகன சந்தைகளில் பிரிமியம் செக்மென்ட்டானது, வெஸ்பாவின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது.

விரைவில் வெளியாக உள்ள பீஜோ ஸ்கூட்டர்கள், வெஸ்பாவிற்கு கடுமையான போட்டி வழங்கும் வகையில் இருக்கும்.

பீஜோ ஸ்கூட்டர்கள்;

பீஜோ ஸ்கூட்டர்கள்;

பீஜோ பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் மெட்ரோபோலிஸ், ஸ்பீட்ஃபைட் மற்றும் ட்ஜாங்கோ (Django) ஸ்கூட்டர்கள், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் பொது காட்சிபடுத்தப்பட்டது.

ஐரோப்பாவில் விற்கப்பட்டு வரும் இந்த 3 ஸ்கூட்டர் மாடல்களும் தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. ஐரோப்பாவில், பீஜோ பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்கள், வெஸ்பா பிராண்டிற்கும் மேலாக வகைப்படுத்தபட்டுள்ளது. இவற்றின் விலைகளும், வெஸ்பா மாடல்களை காட்டிலும் கூடுதலாக உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

ஐரோப்பாவில், மஹிந்திரா நிறுவனத்தின் கட்டுபாட்டில் வழங்கப்படும் பீஜோ பிராண்ட் ஸ்கூட்டர்களின் விலைகள் அதிகமாக இருந்தாலும், அதை இந்தியாவில் அறிமுகம் செய்யும் போது, இந்திய சந்தைகளுக்கு ஏற்ற விலையில் அறிமுகம் செய்ய வேண்டி இருக்கும்.

இந்த பீஜோ ஸ்கூட்டர்களை சரியான விலைகளை, இந்தியாவில் சரியான விலையில் விற்க, அவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், தேவைகள் இருந்தால், இந்த இந்திய உற்பத்தி ஆலைகளை, ஸ்கூட்டர்களை இறக்குமதி செய்ய மையப்புள்ளியாகவும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

மோஜோவின் வெற்றி;

மோஜோவின் வெற்றி;

மஹிந்திரா நிறுவனம் மூலம் ஃபிளாக்ஷிப் மாடலாக அறிமுகம் செய்யபட்ட மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், தற்போதைய நிலையில் எதிர்பார்த்த அளவில் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது.

1 மில்லியன் சாதனை;

1 மில்லியன் சாதனை;

சமீபத்தில் தான், தங்கள் நிறுவனம் இந்தியாவில் 1 மில்லியன் 2 சக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை நிகழ்த்தபட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்தது.

அறிமுகம்;

அறிமுகம்;

மஹிந்திரா நிறுவனம், இந்த பீஜோ பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்களை 2017 அல்லது அதற்கு முன்னதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பீஜோ ஸ்கூட்டர் பிரிவை கையகப்படுத்தும் மஹிந்திரா!

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

பீஜோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பீஜோ ஸ்கூட்டர்கள் - கூடுதல் படங்கள்

பீஜோ ஸ்கூட்டர்கள் - கூடுதல் படங்கள்

பீஜோ ஸ்கூட்டர்கள் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
The Much-Awaited Peugeot Scooters will launched by Mahindra in India. Peugeot Two-Wheeler department was acquired by Mahindra. In 2016 Delhi Auto Expo, Mahindra showcased Peugeot scooters like Metropolis, Speedfight, and Django scooters, alongside their own two-wheelers. Mahindra is planning to launch Peugeot branded scooters in India by 2017. To know more about Mahindra plans with Peugeot Scooters, check here...
Story first published: Friday, June 10, 2016, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X