எம்வி அகுஸ்ட்டாவின் லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி இந்தியாவில் அறிமுகம்

Written By:

எம்வி அகுஸ்ட்டாவின் லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. பல்வேறு புகழ்பெற்ற தயாரிப்புகளின் பேரில், புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யபடுவது ட்ரென்ட்டாக மாறி வருகிறது. அந்த வகையில், எம்வி அகுஸ்ட்டா நிறுவனமும், புதிய எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளனர்.

எம்வி அகுஸ்ட்டாவின் லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எஃப்3 ஆர்சி...

எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிள், எம்வி அகுஸ்ட்டாவின் மிகவும் புகழ்பெற்ற எஃப்3-800 சூப்பர்பைக்கின் ஏஎம்ஜி-பிராண்ட் கொண்ட லிமிட்டெட் எடிஷன் வேரியன்ட் ஆகும். இது இந்தியாவில் மிகவும் ஈர்க்கும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

எம்வி அகுஸ்ட்டாவின் லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிளுக்கு, 798 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 148 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

இந்த எம்வி அகுஸ்ட்டா லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிள், அதிகப்படியாக மணிக்கு 269 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

இந்தியா வருகை;

எம்வி அகுஸ்ட்டா லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிள், இந்த மாத இறுதிக்குள் இந்தியா வந்தடைந்துவிடும்.

எம்வி அகுஸ்ட்டா கருத்து;

"சர்வதேச சந்தைகள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 250 எம்வி அகுஸ்ட்டா லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிள்கள் தான் தயாரிக்கப்பட்டது. இதில், 9 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே இந்திய வாகன சந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது" என எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் தெரிவித்தது.

எம்டி கருத்து;

"எம்வி அகுஸ்ட்டாவின் மிகவும் புகழ்பெற்ற எஃப்3-800 சூப்பர்பைக்கின் ஏஎம்ஜி-பிராண்ட் கொண்ட லிமிட்டெட் எடிஷன் வேரியன்ட்டின் கடைசி எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிள்களை இந்தியாவிற்ள் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். இந்த 9 மோட்டார்சைக்கிள்களில், ஏற்கனவே 5-ன் புக்கிங் உறுதி செய்யபட்டுள்ளது என எம்வி அகுஸ்ட்டா இந்தியா நிறுவனத்தின் எம்டி அஜிங்க்யா ஃபிரோதியா தெரிவித்தார்.

புக்கிங்;

எம்வி அகுஸ்ட்டா லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிளை தற்போது புக்கிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், புக்கிங் செய்து கொள்ளலாம். எம்வி அகுஸ்ட்டா இந்தியா பூனேவை மையமாக கொண்டு இயங்கும் கைனட்டிக் குழுமத்தின் ஒரு அங்கம் ஆகும். வெறும் 9 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே இந்தியாவிற்கு வர உள்ள நிலையில், இதை புக்கிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், முந்துமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

சிறப்பு அம்சம்;

ஒவ்வொரு எம்வி அகுஸ்ட்டா லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிளிலும், சூப்பர்பைக் ரேசர்களான ஜூல்ஸ் க்ளூசெல் மற்றும் லாரென்சோ ஸாநெட்டி ஆகியோர்களின் ஆட்டோகிராஃப் மற்றும் எம்வி அகுஸ்ட்டா பார்ட்னரான ஏஎம்ஜியின் கோ-பிராண்டிங் எனப்படும் இணை-பிராண்டிங்கும் உள்ளது.

விலை;

எம்வி அகுஸ்ட்டா லிமிட்டெட் எடிஷன் எஃப்3 ஆர்சி மோட்டார்சைக்கிள், 19.73 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Italian superbike manufacturer has announced that, they have launched the limited edition F3 RC model in India. This F3 RC model is an AMG-branded limited edition variant of popular superbike the F3-800, which is available for Booking. Each motorcycle will be autographed by superbike racers Jules Cluzel and Lorenzo Zanetti. These units will reach India by this October. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos