விரைவில் புதிய தலைமுறை கேடிஎம் டியூக் 200 மற்றும் 390 பைக் மாடல்கள்

By Meena

கனவுகளுடன் கல்லூரி செல்லும் நமது இளைஞர்களையும், படிப்பை முடித்து விட்டு பல மாற்றங்களை உருவாக்கக் காத்திருக்கும் புதிய தலைமுறையினரையும் பார்த்து உங்களுக்கு எந்த பைக் பிடிக்கும் எனக் கேளுங்கள்...

மொத்தமாகவே 5 அல்லது 6 பைக்குகளின் பெயர்களைத்தான் அவர்கள் அனைவருமே சொல்வார்கள். அதில் நிச்சயம் கேடிஎம் பைக்குகள் இடம்பெற்றிருக்கும். ரேஸ் பைக்கைப் போன்றதொரு தோற்றம், ஸ்போர்ட்டியான வடிவமைப்பு, தகுந்த தொழில்நுட்பம் என அனைத்துமே சாதகமாக இருப்பதால், இளம் சகாக்களின் சாய்ஸாக இந்த கேடிஎம் மாடல் பைக்குகள் விளங்குகின்றன.

கேடிஎம் டியூக் 200

அதில் டியூக் 200 மற்றும் 390 ஆகியவை பிரபலமான மாடல்கள். அந்த இரு மாடல்களையும் மேம்படுத்தி, கூடுதல் அம்சங்களுடன் மெருகேற்ற கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டது. அதற்கான பணிகளையும் தொடங்கியது.

தற்போது அவை அனைத்தும் நிறைவடைந்து, புதிய கேடிஎம் டியூக் 200 மற்றும் டியூக் 390 மாடல் பைக்குகள் சாலைகளில் சோதனை ஓட்டம் போய்க் கொண்டிருக்கின்றன. அவை, வசமாக ஆட்டோ மொபைல் ஆர்வலர்களின் கண்ணில் சிக்கினால் சும்மா இருப்பார்களா?

இதுபற்றிதான் ஹாட்டான விவாதம் எங்கும் நடக்கும். அப்படித்தான் சமீபத்தில் நடந்திருக்கிறது. மேம்படுத்தப்பட்ட டியூக் 200 மற்றும் 390 மாடல்களின் இறுதிகட்ட சோதனை ஓட்டம் பலரின் பார்வையில் சிக்கியிருக்கிறது.

இதையடுத்து, இந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் நடத்தப்படும் சர்வதேச மோட்டார் ஷோவில் அவ்விரு பைக்குகளும் காட்சிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அதற்கு அடுத்த சில மாதங்களுக்குள் டியூக் 200, டியூக் 390 ஆகிய இரு பைக்குகளும் முறைப்படி அறிமுகமாகலாம் என்றும் தெரிகிறது.

தற்போது உள்ள மாடல்களைக் காட்டிலும் மேலும் மெருகூட்டப்பட்டதாக அவை இருக்கும் எனத் தெரிகிறது.

குறிப்பாக பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸாஸ்டர் (புகை போக்கி), ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, புதிய டியூக் 800 மாடலையும் இத்தாலி மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளதாம் கேடிஎம் நிறுவனம்.

என்னென்ன அம்சங்கள் அந்த மாடல்களில் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன? விலை மாற்றம் ஏதேனும் உண்டா? என்பன குறித்த எந்தத் தகவல்களையும் வெளியே மூச்சு விடாமல் ரகசியம் காத்து வருகிறது கேடிஎம் தரப்பு. அதன் காரணமாக பல யூகத் தகவல்கள் ஆட்டோ மொபைல் உலகில் உலா வருகின்றன. அவை அனைத்துக்கும் அடுத்த சில மாதங்களுக்குள் தெளிவான விடை கிடைத்துவிடும் என நம்பலாம்...

Most Read Articles
English summary
New KTM 200 & 390 Duke Could Be Unveiled At EICMA 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X