நார்டன் மோட்டார்சைக்கிள்ஸின் வி4 சூப்பர்பைக், நவம்பர் 19-ல் அறிமுகம்

இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் டூ வீலர்ஸ் நிறுவனம், தங்களின் சூப்பர்பைக்கிற்கு 'வி4' சூப்பர்பைக் என பெயர் சூட்டியுள்ளனர். இது நவம்பர் 19-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்...

By Ravichandran

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய சூப்பர்பைக், நவம்பர் 19-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஆட்டோமொபைல் துறை, மிகவும் விரிவானதாக உள்ளதாலும், பலமான சந்தை வாய்ப்புகள் உள்ளதாலும் பல்வேறு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய சூப்பர்பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

வி4...

வி4...

இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் டூ வீலர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த சூப்பர்பைக்கிற்கு 'வி4' சூப்பர்பைக் என பெயரிடப்பட்டுள்ளது. நார்டன் நிறுவனம், இந்த சூப்பர்பைக்கின் படங்களை வெளியிட்டு டீஸ் செய்து வருகிறது.

புக்கிங்;

புக்கிங்;

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 'வி4' சூப்பர்பைக்கின் புக்கிங், இந்நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைனில் ஏற்கப்பட்டு வருகிறது.

படங்கள்;

படங்கள்;

இது வரை, நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்த வி4 சூப்பர்பைக்கின் படங்கள் மற்றும் குறுகிய வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளது. தற்போது, இதன் மிள்க தெளிவான படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் வி4 சூப்பர்பைக், நவம்பர் 19, 2016 தேதியில் வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நார்டன் வி4 சூப்பர்பைக்கிற்கு 1,200 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது வரை இதன் இஞ்ஜினின் திறன் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. மோட்டார் ஸ்போர்ட் முயற்சிகளின் போது பெற்ற அனைத்து அனுபவங்களையும் நார்டன் நிறுவனம், இந்த சூப்பர்பைக் தயாரிப்பதில் உபயோகப்படுத்தியுள்ளனர்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

நார்டன் வி4 சூப்பர்பைக்கின் ஃபிரேம், அலுமினியம் மற்றும் பில்லட் பகுதிகள் கொண்டு கையால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பாடிஒர்க், கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வி4 சூப்பர்பைக்கின் முழு திறனை ரைடர்கள் பிரயோகிக்கும் வகையில், இதில் உயர் தரமான எலக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ்ஜினை இஞ்ஜினியர்கள் பொருத்தியுள்ளனர்.

கிடைக்கும் வடிவங்கள்;

கிடைக்கும் வடிவங்கள்;

நார்டன் வி4 சூப்பர்பைக், ஸ்டாண்டர்ட் வடிவிலும், லிமிட்டெட் எடிஷன் வடிவிலும் கிடைக்கிறது.

விலை;

விலை;

நார்டன் வி4 சூப்பர்பைக்கின் லிமிட்டெட் எடிஷன் வடிவம், 44,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் 35.7 லட்சம் ரூபாய்) என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த வி4 சூப்பர்பைக்கின் ஸ்டாண்டர்ட் வடிவம், 28,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் 22.7 லட்சம் ரூபாய்) என்ற விலையில் விற்கப்படும்.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிற்கு வருமா?

துரதிர்ஷ்டவசமாக, நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்த நார்டன் வி4 சூப்பர்பைக்கினை இந்தியாவில் வழங்கும் முடிவில் இல்லை.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

ரூ.5.33 கோடிக்கு விற்பனையான யூஸ்டு எஸ்யூவி... அப்படி என்னதான் இருங்குங்க!

டிசி வடிவமைத்த அட்டகாசமான கஸ்மைஸ் கார்கள்- சிறப்புத் தொகுப்பு

டைட்டானிக் கப்பல் மற்றும் விபத்து தொடர்பான அரிய புகைப்படங்கள்!

Most Read Articles
English summary
Norton Motorcycles would unveil all-new Superbike on November 19th, 2016. British-based two-wheeler manufacturer has christened its superbike as 'V4'. Bookings are being accepted through Norton Motorcycles online website. Frame of Norton V4 is handmade out of aluminium and billet parts. Bodywork of V4 by Norton Motorcycles will be crafted out of carbon fibre. To know more, check here...
Story first published: Wednesday, October 19, 2016, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X