விரைவில் 300சிசி வெஸ்பா ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்கும் பியாஜியோ!

By Saravana Rajan

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அறிந்ததே. தற்போது ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் மார்க்கெட்டை விரிவுப்படுத்தும் நோக்கில் பல ரகங்களிலும், திறன்களிலும் மாடல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.

அந்த வகையில், பிரிமியம் ஸ்கூட்டர்கள் மூலமாக இந்தியர்களின் மனதை கொள்ளையடித்த வெஸ்பா பிராண்டில் புதிய 300சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த அதன் தாய் நிறுவனமான பியாஜியோ திட்டமிட்டு இருக்கிறது.

மாடல் விபரம்

மாடல் விபரம்

வெஸ்பா ஜிடிஎஸ் 300 என்ற ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய பியாஜியோ திட்டமிட்டு இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

வெஸ்பா ஜிடிஎஸ் 300 ஸ்கூட்டரில் ஒரு சிலிண்டர் கொண்ட 278சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 21 பிஎச்பி பவரையும், 22.3 என்எம் டார்க்கையும் வழங்கும்.

ஸ்போர்ட்ஸ் ரகம்

ஸ்போர்ட்ஸ் ரகம்

அதாவது, 300சிசி ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான பவரை வெளிப்படுத்தும் என்பதால், இளைஞர்களை வெகுவாக கவரும்.

டிராக்ஷன் கன்ட்ரோல்

டிராக்ஷன் கன்ட்ரோல்

அதிசக்திவாய்ந்த இந்த ஸ்கூட்டருக்கு பாதுகாப்பு அம்சங்களும் தேவை. இதற்காக, புதிய வெஸ்பா ஜிடிஎஸ் 300 ஸ்கூட்டரில் 2 சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் மற்றும் அனலாக் டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

இந்த ஸ்கூட்டர் முழுவதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனவே, விலையும் நிச்சயம் அதிகமாக இருக்கும். அதற்கேற்ற சரக்குகளும் இந்த ஸ்கூட்டரில் இருக்கும்.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய பியாஜியோ நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

ஆறாவது மாடல்

ஆறாவது மாடல்

தற்போது இந்தியாவில் 5 மாடல்களை வெஸ்பா பிராண்டில் பியாஜியோ குழுமம் விற்பனை செய்து வருகிறது. புதிய ஜிடிஎஸ் 300 மாடல் ஆறாவது மாடலாக வருகிறது.

Most Read Articles
English summary
Scoop! Piaggio To Launch The Vespa GTS 300 in India
Story first published: Saturday, August 27, 2016, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X