வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்... ஹார்ட் அட்டாக் வரவைக்கும் விலை!

Written By:

பிரிமியம் வகை ஸ்கூட்டர் மாடல்களை வெஸ்பா நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையல், இன்று இரண்டு புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரு ஸ்பெஷல் எடிசன் மாடல்களில் இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களையும், படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன் என்ற பெயரில் ஒரு ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரும், வெஸ்பாவின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு ஸ்பெஷல் எடிசன் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதலில் அர்மானி எடிசனையும், தொடர்ந்து 70ம் ஆண்டு சிறப்பு பதிப்பு மாடல் விபரங்களையும் படிக்கலாம்.

பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் ஜார்ஜியோ அர்மானி ஃபேஷன் ஹவுஸ் நிறுவனத்தின் 40ம் ஆண்டு கொண்டாட்டத்திற்காகவும் பியோஜியோ குழுமத்தின் 130வது ஆண்டு தினத்தை முன்னிட்டும், வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசனை பியாஜியோ குழுமம் வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, வாகன சேகரிப்பு ஆர்வமுடையவர்களுக்கான மிக மிக பிரத்யேகமான மாடல். விசேஷமான சாம்பல் மற்றும் பச்சை வண்ணக் கலவை பூச்சுடன் கவர்கிறது வெஸ்பா 946 அர்மானி எடிசன். இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறிய பச்சை வண்ணமானது, விளக்கொளியில் மட்டுமே கண்ணுக்கு புலப்படுமாம்.

பாரம்பரியத்தை உணர்த்தும் விதத்தில் ஒற்றை இருக்கை, பின்புறத்தில் இருக்கும் கேரியரில் பழுப்பு வண்ண சேடில் பேக் போன்றவை சிறப்பு சேர்க்கின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதி போன்றவை முக்கிய அம்சங்கள்.

பக்கவாட்டில் எம்போரியோ அர்மானி ஆங்கில எழுத்துக்களுடன் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருக்கிறது. மிகவும் விசேஷமான ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள், வட்ட வடிவ ஹெட்லைட், கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட சைடு மிரர்கள் போன்றவை சிறப்பு சேர்க்கும் அம்சங்கள்.

இந்த ஸ்கூட்டருக்கு ரூ.12.04 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.

அடுத்து, வெஸ்பா விஎக்ஸ்எல் ஸ்கூட்டர் மாடலின் ஸ்பெஷல் எடிசன் மாடலையும் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது பியோஜியோ குழுமம். வெஸ்பா நிறுவனத்தின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அஸுரோ 70 என்ற விசேஷமான வண்ணத்தில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும். இருக்கையில் 70வது ஆண்டு நிறைவை குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. விண்ட் ஸ்கிரீன், க்ளவ் பாக்ஸில் விசேஷ சின்னமும் பொறிக்கப்பட்டு இருக்கிறது. சாரி கார்டு, ஃபுட்ஸ்டெப், சாம்பல் வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

வெஸ்பா விஎக்ஸ்எல் சிறப்பு பதிப்பு மாடல் ரூ.96,500 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வெஸ்பா 946 அர்மானி எடிசன் ஸ்கூட்டர் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். பியோஜியோ நிறுவனத்தின் மோட்டோப்ளக்ஸ் பிரிமியம் ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும். வெஸ்பா விஎக்ஸ்எல் ஸ்பெஷல் எடிசன் மாடல் அனைத்து வெஸ்பா ஷோரூம்களிலும் கிடைக்கும்.

English summary
Piaggio has finally launched the limited edition Vespa 946 Emporio Armani along with the a new 70th anniversary edition.
Please Wait while comments are loading...

Latest Photos