இந்த தமிழக பைக் பந்தய வீரர் சாம்பியனாக தொடர உதவுங்களேன்!!

By Saravana

மலேசியன் சூப்பர் பைக் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் தமிழகத்தை சேர்ந்த முன்னணி பைக் பந்தய வீரரான ரஜினி கிருஷ்ணன் போதிய நிதி இல்லாமல் சிரமத்தில் ஆழ்ந்திருப்பது மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரிக்கெட் அளவுக்கு இந்தியாவில் வேறு விளையாட்டுகளுக்கு போதிய வரவேற்பு இருப்பதில்லை. இதனால், ஹாக்கி, தடகளம், மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தில் திறமையான வீரர்கள் பலர் வறுமையிலும், போதிய நிதி இல்லாமல் மேற்கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்த இயலாத நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

ரஜினி கிருஷ்ணா

அந்த வகையில், கடந்த ஆண்டு மலேசியன் சூப்பர் பைக் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவரான தமிழகத்தை சேர்ந்த ரஜினி கிருஷ்ணன் தற்போது இந்த ஆண்டுக்கான மலேசியன் சூப்பர் பைக் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு போதிய நிதி இல்லாமல் சிரமத்தில் ஆழ்ந்துள்ளார்.

வரும் 13ந் தேதி மலேசியாவிலுள்ள செபாங் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற இருக்கும் பைரேல்லி மலேசியன் சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள, ரஜினி கிருஷ்ணாவுக்கு ரூ.16 லட்சம் வரை தேவைப்படுகிறது. இதனை திரட்டுவதற்காக அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் நிதி அளிக்கும்படி வேண்டுகோள் வைத்துள்ளார்.

2016 மலேசியன் சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியின் 5 ரவுண்டுகளில் பங்கேற்பதற்கு அவருக்கு ரூ.16 லட்சம் வரை தேவைப்படுகிறது. இதில், பந்தயத்தில் பயன்படுத்துவதற்கான கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் பைக்கை வாங்குவதற்கும், உதிரிபாகங்கள், மெக்கானிக்கிற்கு கொடுக்க வேண்டிய கட்டணம் ஆங்கியவை அடங்கும். ரூ.2 லட்சம் சொந்த செலவிலும், ரூ.14 லட்சத்தை ஆதரவாளர்களிடமிருந்து திரட்டுவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.

பைக் ரேஸர்

எதிர்காலத்தில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தின் முதல் வகையாக கருதப்படும் மோட்டோஜிபி பந்தயத்தில் பங்கேற்கும் கனவுடன் பயிற்சிகளையும், முயற்சிகளையும் எடுத்து வருகிறார் ரஜினி கிருஷ்ணன். இதற்காக, மோட்டோ2 பைக் பந்தயங்களில் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளார். முதல் நிலை வகை பைக் பந்தயங்களுக்கு அடித்தளமிடும் வகையில், ஸ்பானிஷ் சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

மலேசியன் சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஜினி கிருஷ்ணா பங்கேற்பதற்கு நல் உள்ளம் கொண்டவர்கள் கீழ் கண்ட இணைப்பில் சென்று நிதி உதவி அளிக்கலாம். அவர் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு துணையாக இது அமையக்கூடும்.

நிதி உதவி அளிக்க விரும்புவோர் இந்த இணைய பக்கத்திற்கு செல்லவும்.

Most Read Articles
English summary
Rajini Krishnan Needs Your Help To Retain His Superbike Championship Crown.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X