அட்டகாசமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட பஜாஜ் வி15 பைக்... !!

By Saravana Rajan

சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பைக் மாடல்களில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும் மாடல் பஜாஜ் வி15. இந்த பைக்கின் வித்தியாசமான டிசைன் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத் நகரை சேர்ந்த EIMOR Customs என்ற நிறுவனம், இந்த பைக்கை மிகச்சிறப்பாக மாறுதல்களை செய்து அசத்தியிருக்கிறது. பஜாஜ் வி15 பைக்கின் மதிப்பையும், கவர்ச்சியையும் பன்மடங்கு உயர்த்தும் அம்சங்களை இது பெற்றிருக்கிறது. வாருங்கள் படங்களுடன் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெண் வாடிக்கையாளர்

பெண் வாடிக்கையாளர்

பைக்குகளின் மீது அதீத ஆர்வம் கொண்ட பெண் வாடிக்கையாளர் ஒருவருக்காக இந்த பைக்கை கஸ்டமைஸ் செய்து கொடுத்ததாக EIMOR கஸ்டமைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஐடியா

ஐடியா

அந்த பெண் வாடிக்கையாளர் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலும், EIMOR நிறுவனத்தின் தொழில் திறமையின் அடிப்படையிலும் மிகச்சிறப்பாக வந்துள்ளது இந்த மோட்டார்சைக்கிள்.

பணிகள்

பணிகள்

தனது விருப்பத்தை தெரிவித்துவிட்டு சென்ற அந்த பெண் வாடிக்கையாளர் ஒரு வாரத்தில் ஒரு புதிய பஜாஜ் வி15 பைக்கை டெலிவிரி பெற்று வந்து எங்களிடம் கொடுத்தார். மேலும், இந்த பைக்கை மனதுக்கு பிடித்தமான ஒருவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து, சாதாரண பஜாஜ் வி15 பைக்குகளைவிட மிகவும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார்.

ஆலோசனை

ஆலோசனை

அந்த பெண் வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பல விஷயங்களை EIMOR நிறுவனத்தின் பணியாளர்கள் ஒரு சில நாட்கள் தகவல்களை திரட்டிய பின் அதுபற்றி ஆலோசித்து, அதன் அடிப்படையில் கஸ்டமைஸ் பணிகள் துவங்கியிருக்கிறது.

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க், ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான். எனவே, அதனை மேலும் சிறப்பிக்கும் விதத்திலேயே இந்த பைக்கை கஸ்டமைஸ் செய்துள்ளனர்.

 தனித்துவமான தோற்றம்

தனித்துவமான தோற்றம்

இந்த பைக்கின் ஒரிஜினல் பெயிண்ட்டிற்கு பதிலாக ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் பயன்படுத்தப்பட்டிருந்த சாம்பல் வண்ணத்தை கொடுத்தனர். மேலும், எஞ்சின் பாகங்கள், சைலென்சர், சக்கரங்கள் ஆகியவை கருப்பு வண்ணத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

பேட்ஜ்

பேட்ஜ்

பெட்ரோல் டேங்கில் பஜாஜ் வி15 பைக்கின் V என்ற பேட்ஜ் மட்டும் மாற்றப்படவில்லை. மேலும், பெட்ரோல் டேங்கில் பக்கவாட்டில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் சேவையாற்றிய காலக்கட்டத்தை குறிக்கும் விதத்தில் 1961-1997 என்ற ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதுமட்டுமா...

அதுமட்டுமா...

பெட்ரோல் டேங்கின் மேல்புறத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் படமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில், இந்த வித்தியாசமான பெயிண்டிங், வாடிக்கையாளர் எதிர்பார்த்ததைவிட மிகவும் தனித்துவமாக மாறியிருக்கிறது.

தத்ரூபமான துரு...

தத்ரூபமான துரு...

பைக்கின் வால் பகுதியில் The Invisible என்ற பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் பிரச்சார வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதில், முத்தாய்ப்பாக, ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் நீண்ட நாள் சேவையிலிருந்ததால், அதன் பாகங்கள் துருப் பிடித்திருந்ததை நினைவூட்டும் விதத்தில், அந்த பிரச்சார வாசகத்தில் துருப் பிடித்தது போன்ற ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, பழமையான பைக் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

எவ்வளவு நாளில்...

எவ்வளவு நாளில்...

பைக்கை முழுவதுமாக கழற்றிதான் இந்த பணிகளை செய்துள்ளனர். இதற்கு மூன்று வாரங்கள் பிடித்ததாக EIMOR கஸ்டமைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு எவ்வளவு செலவானது என்பது குறித்த தகவல் இல்லை.

Most Read Articles
English summary
Story Behind 'The Invincible' Bajaj V By EIMOR Customs
Story first published: Wednesday, June 22, 2016, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X