புதிய 250சிசி சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்... இந்தியாவுக்கு உண்டா, இல்லையா?

ஸ்பை படங்கள் மூலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய 250சிசி ரக ஸ்போர்ட்ஸ் பைக்கை சுஸுகி நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய பைக்கை பற்றிய தகவல்களை காணலாம்.

Written By:

ஸ்பை படங்கள் மூலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய 250சிசி ரக ஸ்போர்ட்ஸ் பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சீனாவில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்திருக்கிறது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய பைக் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில், இந்த புதிய பைக் மாடல் இந்தியாவில், 250சிசி ஜிக்ஸெர் பைக்காக அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தநிலையில், இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கின் சிறப்பம்சங்களையும், கூடுதல் தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ் உயர்வகை பைக் மாடல்களின் குடும்ப வரிசையில் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வெளிவந்துள்ளது. இதனால், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்-1000 சூப்பர் பைக்கின் டிசைன் சாயல்களை தாங்கி வந்துள்ளது. இந்த டிசைன் இளைஞர்களை நிச்சயம் கவரும்.

இந்த புதிய பைக்கில் சுஸுகி இனசுமா பைக்கில் பயன்படுத்தப்பட்ட இரண்டு சிலிண்டர்கள் கொண்ட அதே 248சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8,000ஆர்பிஎம்.,மில் 25 பிஎச்பி பவரையும்,6,500 ஆர்பிஎம்.,மில் 23.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

நேரடி போட்டியாளரான ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில் இருக்கும் ஒற்றை சிலிண்டர் எஞ்சின் வழங்கும் அதே சக்தியை இந்த பைக் வழங்கும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சக்தி குறைவான எஞ்சினாக ஏமாற்றம் தந்திருக்கும் நிலையில், ஸ்லிப்பர் க்ளட்ச், எல்இடி ஹெட்லைட்டுகள் போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகள் இல்லை என்பது ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.

178 கிலோ எடை கொண்ட இந்த பைக்கின் செயல்திறனும் எதிர்பார்த்த அளவு இருக்குமா என்பதிலும் சந்தேகம்தான். இந்த பைக்கின் முன்சக்கரத்தில் இரட்டை பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 290மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

முன்சக்கரத்தில் 110/80/R17 அளவுடைய டயரும், பின் சக்கரத்தில் 140/70/R17 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனும் உள்ளது முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் குறிப்பிடத்தக்க விஷயம்.

ஹோண்டா சிபிஆர் 250ஆர் மற்றும் யமஹா ஆர்3 பைக் மாடல்களுடன் போட்டி போடும். இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் விலை கொண்டதாக இருக்கிறது. அதாவது, இதைவிட பவர்ஃபுல் பைக் மாடலாக இருக்கும் யமஹா ஆர்3 பைக்கை விட சற்றே விலை குறைவாக உள்ளது.

இந்த புதிய பைக் மாடல் இந்தியாவிற்கு எப்போது வரும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இதே பைக் இந்தியாவில் வருவதில் சந்தேகம்தான். ஆனால், இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் புதிய 250சிசி ஜிக்ஸெர் பைக்கை சுஸுகி அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Japanese two-wheeler manufacturer Suzuki has officially unveiled one of the most awaited quarter litre motorcycle in China.
Please Wait while comments are loading...

Latest Photos