அலுமினிய அரக்கனமாக மாறிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் முதல் கஸ்டமைஸ் மாடல் உலகுக்கு தரிசனம் கொடுத்திருக்கிறது. அந்த மோட்டார்சைக்கிளின் படங்கள், விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை கஸ்டமைஸ் செய்து மாற்றிக் கொள்வதை பலருக்கு வழக்கம். சிலர் சிறிய அளவிலும், சிலர் மோட்டார்சைக்கிளை முழுமையாக வேறு ரூபத்திலும் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றனர்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள்தான் அதிக அளவில் கஸ்மடைஸ் செய்யப்படுவதை காண முடியும். இந்த நிலையில், முதல்முறையாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை முழுவதுமாக வேறு ரூபத்திற்கு மாற்றியிருக்கின்றனர். படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து படிக்கலாம்.

டெல்லியில் செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சவுத்டெல்லி மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்த மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறது. இன்லைன்3 என்ற கஸ்டமைஸ் நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளின் கஸ்டமைஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.

சால்ட் ரேஸர் எனப்படும் வகையில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாற்றப்பட்டு இருக்கிறது. எஞ்சினை தவிர்த்து, வேறு ஒன்றும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளுடன் ஒத்துப் போகாத வகையில் முற்றிலும் மாற்ரம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் உடல்கூடு முழுவதும் கழற்றப்பட்டு, புதிய உடல்கூடு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட் ஸ்கூப், பெட்ரோல் டேங்க், இருக்கை என அனைத்தும் அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அகலமான புதிய டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

க்ளிப் ஆன் ஹேண்டில்பார், கன் மெட்டல் ஃபோர்க்குகள் என பல பாகங்கள் புதிதாக கோர்க்கப்பட்டுள்ளன. இலகு எடையுடைய அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஒரிஜினல் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளைவிட எடை 20 கிலோ வரை குறைந்திருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் 411சிசி எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க்கையும் வழங்கும். ஆனால், ஒரிஜினல் மோட்டார்சைக்கிளைவிட எடை 20 கிலோ குறைந்துள்ளதால், செயல்திறன் கூடுதலாக இருக்கும் என நம்பலாம்.

ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, இந்த கஸ்டமைஸ் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை தனது ஷோரூமில் காட்சிக்கு வைப்பதற்கு சவுத்டெல்லி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
This Royal Enfield Himalayan Is A Perfect Salt Racer. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos