செப்டம்பர் விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள்!

செப்டம்பர் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்களை இங்கே பார்க்கலாம்.

By Saravana Rajan

பண்டிகை காலம் துவங்கியதன் தாக்கம் இருசக்கர வாகன மார்க்கெட்டில் நன்றாகவே பிரதிபலித்தது. வழக்கத்தைவிட சில மாடல்களின் விற்பனை புதிய உச்சங்களை தொட்டு அசத்தியிருக்கிறது.

மேலும், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை புதிய உயரத்தை தொட்டு பிற நிறுவனங்களை வியக்க வைத்திருக்கிறது. கடந்த மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகன மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. பஜாஜ் சிடி 100

10. பஜாஜ் சிடி 100

டாப் 10 பட்டியலில் 10வது இடத்தை பஜாஜ் சிடி 100 பைக் பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 56,652 பஜாஜ் சிடி 100 பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் மாடல் என்பது இதன் பலம்.

09. டிவிஎஸ் ஜுபிடர்

09. டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் 60,943 டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. டிசைன், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பாக இருப்பதால், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்து வாடிக்கையார்களின் அமோக ஆதரவை பெற்ற மாடலாக வலம் வருகிறது.

 08. பஜாஜ் பல்சர்

08. பஜாஜ் பல்சர்

கடந்த மாதத்தில் 68,007 பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. இதன்மூலமாக, பல்சர் பிராண்டுக்கான மவுசு வாடிக்கையாளர்களிடத்தில் சிறிதும் குறையவில்லை என்பது புலனாகிறது. தோற்றம், கையாளுமை, விலை என அனைத்திலும் தன்னிறைவ தரும் மாடலாக பெயர் பெற்றிருக்கிறது.

 07. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

07. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

கடந்த மாதம் 78,405 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. 4-ஸ்ட்ரோக் எஞ்சின் மாடல் வந்தது இன்னும் பலத்தை கூட்டியிருப்பது தெரிகிறது. அத்துடன், மலிவான விலையில் சிறந்த போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது.

06. ஹீரோ கிளாமர்

06. ஹீரோ கிளாமர்

கடந்த மாதத்தில் 80,742 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. ஸ்மூத்தான எஞ்சின், அதிக மைலேஜ், சரியான விலையில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.

05. ஹோண்டா ஷைன்

05. ஹோண்டா ஷைன்

டிசைன், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பான பைக் மாடல் ஹோண்டா ஷைன். கடந்த மாதத்தில் 91,447 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. ஹோண்டாவின் விற்பனையில் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக, அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது.

04. ஹீரோ பேஷன்

04. ஹீரோ பேஷன்

100சிசி மார்க்கெட்டில் சற்று பிரிமியம் பைக் மாடல். இதனால், தொடர்ந்து வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த மாதத்தில் 92,378 பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதத்தில் 1,31,867 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மிக குறைவான விலையில் நிறைவை தரும் பைக் மாடல்.

 02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

பைக் மார்க்கெட்டில் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பர்-1 சாய்ஸ் ஸ்பிளென்டர்தான். நீண்ட காலமாக தனது மார்க்கெட்டை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது. கடந்த மாதத்தில் 2,54,704 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரால், விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 மாடல் என்ற பெயரை இழந்து வருகிறது.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

கடந்த மாதத்தில் 3,01,529 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஸ்பிளென்டரை மிக அதிக வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து 9வது மாதமாக நம்பர் 1 இடத்தை பெற்றிருப்பதுடன், விற்பனை 3 லட்சத்தை தாண்டி அசத்தியிருக்கிறது. தோற்றம், பிக்கப், மறுவிற்பனை மதிப்பு என வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது.

 செப்டம்பர் விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள்!

மிக நீண்ட காலமாக விற்பனையில் நம்பர் - 1 இடத்தில் இருந்து வந்த ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கிற்கு ஹோண்டா ஆக்டிவா முடிவு கட்டியிருக்கிறது. மேலும், ஸ்பிளென்டர் நினைத்தாலும் பிடிக்க முடியாத எண்ணிக்கையில் ஹோண்டா ஆக்டிவா விற்பனை முன்னேறி உள்ளது.

Most Read Articles
English summary
Here are the top selling two-wheelers in India in September. There is an increase in shift from motorcycles to scooters in the Indian market.
Story first published: Friday, October 28, 2016, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X