ஒரு லட்ச ரூபாய்க்குள் சிறந்த செயல்திறன் கொண்ட டாப் - 5 பைக்குகள்!

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட் மார்க்கெட்டில் சிறந்த செயல்திறன் வழங்கும் டாப் - 5 பைக் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

சிறப்பான செயல்திறனை வழங்கும் பைக் மாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைய சமுதாயத்தினர் செயல்திறன் பைக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ஒரு லட்ச ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் சிறந்த செயல்திறன் கொண்ட டாப் - 5 பைக் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்த பட்ஜெட்டில் ஏராளமான மாடல்கள் கிடைத்தாலும், பொதுவான காரணங்களின் அடிப்படையில் சிறந்த மாடல்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

01. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

டிவிஎஸ் அப்பாச்சி பிராண்டுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதுவரை 2 மில்லியன் அப்பாச்சி பைக்குகள் விற்பனையாகி உள்ளன. அதில், அப்பாச்சி பிராண்டில் வந்த சமீபத்திய மாடல் ஆர்டிஆர் 200வி. அப்பாச்சி குடும்பத்தில் அதிசக்திவாய்ந்த மாடலும் இதுதான்.

தோற்றம், செயல்திறன் என அனைத்திலும் சிறப்பானதாக பெயர் பெற்றிருக்கிறது இந்த பைக். இந்த பைக்கில் இருக்கும் 197.7சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 20.71 பிஎச்பி பவரை வழங்க வல்லது. இந்த பைக் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் கடந்துவிடும். ரூ.89,215 முதல் ரூ.94,215 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

02. பஜாஜ் பல்சர் 220

பஜாஜ் பல்சர் பைக்குகளின் செயல்திறன் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் பிராண்டுக்கு இன்றும் அதிக மவசு உள்ளது. அதற்கு காரணம், சரியான விலையில் சிறந்த பைக் மாடல்களாக வாடிக்கையாளர்களால் பாராட்டப்படும் மாடல். பல்சர் பிராண்டில் அதிசக்திவாய்ந்த மாடல்தான் பல்சர் 220.

இந்த பைக்கில் 220சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.71 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த பைக் 0 - 60 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். ரூ.91,201 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்ய்படுகிறது.

03. ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்

கடந்த ஆண்டு இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாக சிபி வரிசையில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா பைக்குகள் வாடிக்கையாளர்களிடத்தில் தனி மதிப்பு பெற்றுள்ளன. அந்த வகையில், இந்த பைக்கும் சிறப்பானதாக இருக்கிறது.

தோற்றம், செயல்திறன் என இரண்டிலும் வல்லமையான மாடல். இந்த பைக்கில் இருக்கும் 162.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 15.66 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஹோண்டாவின் விசேஷ காம்பி பிரேக் சிஸ்டமும் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. ரூ.80,603 முதல் ரூ.86,084 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

04. சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கிற்கு கிடைத்த வரவேற்பு நாடே அறிந்ததுதான். இந்த நிலையில், ஜிக்ஸெருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் ஃபேர்டு வெர்ஷனாக ஜிக்ஸெர் எஸ்எஃப் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சாதாரண ஜிக்ஸெர் நேக்டு பைக்கைவிட 4 கிலோ கூடுதல் எடை கொண்டதாக வந்தது.

ஹயபுசா, ஜிஎஸ்எக்ஸ்-ஆர் உள்ளிட்ட சூப்பர் பைக் மாடல்களுக்கு செய்யப்பட்ட சோதனை முறைகள் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டன. இந்த பைக்கில் 154.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 14.6 பிஎச்பி பவரை அளிக்கும். ரூ.94,774 முதல் ரூ.98,703 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

05. பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ்

இந்தியாவின் மிக குறைவான விலை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் பஜாஜ் அவென்ஜர் 220. பைக் பிரியர்கள் மத்தியில் பஜாஜ் அவென்ஜர் மோட்டார்சைக்கிளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பஜாஜ் அவென்ஜர் மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 220சிசி எஞ்சின் மட்டுமின்றி 150சிசி மாடலிலும் வந்தது. இதனால், அந்த பைக்கிற்கான வரவேற்பு கணிசாக உயர்ந்தது.

நீண்ட தூர பயணங்களை சுகமானதாக்கும் வகையிலான தாழ்வான வசதியான இருக்கை அமைப்பு, ஃபுட்ரெஸ்ட், விண்ட் ஷீல்டு, சக்திவாய்ந்த எஞ்சின் என க்ரூஸர் மோட்டார்சைக்கிளுக்கு உண்டான அனைத்து சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் 220சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.76 பிஎச்பி பவரை அளிக்கும். ரூ.87,331 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இதர மாடல்கள்

யமஹா எஃப்இசட் பைக் மாடலுக்கும், பஜாஜ் பல்சர் 180 மாடல்களும் சிறப்பான செயல்திறன் கொண்ட பைக் மாடல்களாக கூறலாம். யமஹா எஃப்இசட் பைக்கில் இருக்கும் 153சிசி எஞ்சின் அதிகபட்சமாக 13.80 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. ரூ.74,491 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

பஜாஜ் பல்சர் 180

எஞ்சினின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் மற்றும் எடைக்குமான விகிதாச்சாரத்தில் பஜாஜ் பல்சர் 180 சிறப்பான மாடல். இந்த பைக்கில் இருக்கும் 178.6சிசி எஞ்சின் அதிகபட்சமாக 16.78 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. ரூ.79,545 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Top 5 performance bikes under 1 lakh provides both performance and price value along with specs and features.
Please Wait while comments are loading...

Latest Photos