ஜூலை விற்பனையில் கலக்கிய இந்தியாவின் டாப் 10 ஸ்கூட்டர்கள்!

By Saravana Rajan

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களுக்கு சிறந்த போக்குவரத்து சாதனமாக ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள் மாறியிருக்கின்றன. சக்திவாய்ந்த எஞ்சின், வசதியாக அமர்ந்து ஓட்டுவதற்கான இடம், இருபாலருக்கும் ஏற்ற வடிவமைப்பு, பொருட்களை வைப்பதற்கான இடவசதி என பல சிறப்பம்சங்களை பெற்றிருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இருப்பினும், அனைத்து விதத்திலும் நிறைவை தரும் ஸ்கூட்டர் மாடல்களே வாடிக்கையாளர் மனதில் பதிந்து அதிக விற்பனையை பெற்று வருகின்றன. அந்த விதத்தில், ஜூலை மாத விற்பனையில் கலக்கிய டாப் 10 ஸ்கூட்டர் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. ஹோண்டா நவி

10. ஹோண்டா நவி

மோட்டோஸ்கூட்டர் என்ற கலப்பின வகையில் வந்த இந்த ஸ்கூட்டர் விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் 11,644 ஹோண்டா நவி ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. புதுமாதிரியான தோற்றம், விலை குறைவு என்பதுடன், டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்எல் போன்று கியர் இல்லாத வாகனமாக இருப்பதால் எளிதாக ஓட்ட முடியும். ஆனால், குறைந்த கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இதன் பெரிய மைனஸ். அடிக்கடி பெட்ரோல் நிலையத்திற்கு செல்ல வைப்பதாக வாடிக்கையாளர்கள் குறைபட்டு கொள்கின்றனர்.

09. சுஸுகி ஆக்செஸ்

09. சுஸுகி ஆக்செஸ்

ஹோண்டா ஆக்செஸ் ஸ்கூட்டர் 9வது இடத்தில் உள்ளது. பல புதிய மாடல்கள் வந்ததால் சந்தையில் போட்டி அதிகமானதை தாக்குப் பிடிக்காமல் இந்த பட்டியலில் பின்தங்கி நிற்கிறது. ஜூலை மாதத்தில் 13,120 ஆக்செஸ் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை பலம். மைலேஜ்தான் இதன் மைனஸ்.

08. யமஹா ரே

08. யமஹா ரே

யமஹா ரே ஸ்கூட்டர் ஸ்திரமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 14,080 யமஹா ரே ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஸ்டைலை விரும்புவர்களுக்கு நல்ல சாய்ஸ்.

07. ஹீரோ ப்ளஷர்

07. ஹீரோ ப்ளஷர்

கடந்த மாதத்தில் ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டர் 7வது இடத்தை பிடித்தது. ஜூலையில் 15,738 ப்ளஷர் ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்துள்ளது. பராமரிப்பு குறைவு, ஹீரோவின் பிரம்மாண்ட சர்வீஸ் நெட்வொர்க் போன்றவை இதற்கு வலு சேர்க்கின்றன.

 06. யமஹா ஃபஸினோ

06. யமஹா ஃபஸினோ

யமஹா ஃபஸினோ ஸ்கூட்டர் 6வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 18,162 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதன் பழமை தோற்றமுடைய வித்தியாசமான டிசைன், சரியான விலை போன்றவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன.

 05. ஹீரோ டூயட்

05. ஹீரோ டூயட்

பைக் மார்க்கெட்டை போன்றே ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பிடித்துவிட வேண்டும். ஹோண்டா ஆக்டிவா விற்பனையை எப்படியாவது குறைத்து ஹீரோ ஸ்பிளென்டரை முதலிடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்திய புதிய ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று. கடந்த ஜூலையில் 24,391 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது நல்ல எண்ணிக்கைதான் என்றாலும், ஹீரோவின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமிருக்கிறது.

04. ஹீரோ மேஸ்ட்ரோ

04. ஹீரோ மேஸ்ட்ரோ

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ரீபேட்ஜ் மாடாலகவும், கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விற்பனையிலும் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 32,311 மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. தோற்றம், நம்பகமான எஞ்சின், ஹீரோவின் சிறப்பான சேவை ஆகியவை வலு சேர்க்கின்றன.

03. ஹோண்டா டியோ

03. ஹோண்டா டியோ

இளைஞர்களின் முதல் சாய்ஸ் இதுதான். துள்ளலான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை போன்றவை இதற்கு வலு சேர்க்கின்றன. கடந்த மாதத்தில் 32,388 டியோ ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

02. டிவிஎஸ் ஜூபிடர்

02. டிவிஎஸ் ஜூபிடர்

ஹோண்டா ஆக்டிவாவுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல். தோற்றம், செயல்திறன், விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது. கடந்த மாதத்தில் 46,557 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிவிஎஸ் மோட்டார்ஸ் வர்த்தகத்திலும் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 இருசக்கர வாகன மாடலாக வலம் வருகிறது. போட்டியாளர்கள் யாருமே எட்ட முடியாத இடத்தில் உள்ளது இதன் விற்பனை. ஆம், கடந்த மாதத்தில் 2,56,173 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைன், தரம், செயல்திறன், மைலேஜ் என அனைத்திலும் சிறப்பாக உள்ளது. அத்துடன், மறுவிற்பனை மதிப்பிலும் சிறந்தது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை அடிக்க இன்னொரு மாடலை நினைத்தே பார்க்க முடியாத அளவு சந்தையில் ஆளுமை செலுத்தி வருகிறது.

Most Read Articles
English summary
Honda Navi Makes It To Top Ten Selling Scooters List In July.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X