2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர்...

டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர்...

கஃபே ரேசர் அடிப்படையிலான இந்த 2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளை, இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம், தயாரித்து வழங்குகிறது.

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

பெயர் காரணம்;

பெயர் காரணம்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளுக்கு, த்ரக்ஸ்டன் ஆர் என்ற பெயர், 1960 மற்றும் 1970-களில் நடைபெற்ற சிறப்புமிக்க 500 மைல் த்ரக்ஸ்டன் என்ட்யூரன்ஸ் ரேஸ் சீரிஸ் (500 mile Thruxton endurance race series) அடிப்படையாக கொண்டு சூட்டப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், 1,200சிசி, லிக்விட் கூல்ட், பேரலல் ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 6,750 ஆர்பிஎம்களில் 96 பிஹெச்பியையும், 4,950 ஆர்பிஎம்களில் 112 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளின் இன்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடேன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், ஒரு லிட்டருக்கு 21.7 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டேங்க் கொள்ளளவு;

டேங்க் கொள்ளளவு;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளின், ஃப்யூவல் டேங்க், 14.5 லிட்டர் என்ற அளவிலான கொள்ளளவு கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், முன் பக்கத்தில் ட்வின் 310 மில்லிமீட்டர் ஃப்ளோட்டிங் டிஸ்க்குகள் மற்றும் ஏபிஎஸ் உடனான பிரேக் கொண்டுள்ளது.

பின் பக்கத்தில், 220 மில்லிமீட்டர் டிஸ்க்கு மற்றும் ஏபிஎஸ் உடனான பிரேக் கொண்டுள்ளது.

டயர்கள்;

டயர்கள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளுக்கு, முன் பக்கத்தில் 120/70-17 இஞ்ச் டயரும், பின பக்கத்தில் 160/60-17 இஞ்ச் டயரும் பொருத்தபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன் பொருத்த வரை, 2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், முன் பக்கத்தில் 120 மில்லிமீட்டர் டிராவல் உடைய ஷோவா யூஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் 120 மில்லிமீட்டர் டிராவல் உடைய ஆஹ்ளின்ஸ் ட்வின் ஷாக்ஸ் அமைப்பை கொண்டுள்ளது.

எடை;

எடை;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், டிரை எடை ( வெயிட் - Weight (Dry)) 203 கிலோகிராம்களாக உள்ளது.

சாடில் ஹையிட்;

சாடில் ஹையிட்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், 800 மில்லிமீட்டர் என்ற அளவிலான சாடில் ஹையிட் (Saddle Height) கொண்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

கஃபே ரேசர் அடிப்படையிலான இந்த 2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளுக்கு, ரெட்ரோ தோற்றம் ஏற்கபட்டுள்ளது.

இது வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் கொண்டுள்ளது.

ஃப்யூவல் டேங்க்கின் மீதுள்ள கட்அவுட்கள், மோன்ஸா ஃப்யூவல் ஃபில்லர் கேப்கள், பின் பகுதியில் உள்ள ட்வின் ஷாக்ஸ்கள், கடந்த கால மோட்டார்சைக்கிளுக்கு மரியாதை செலுத்தும வகையில் உள்ளது.

குரோம் பூச்சு செய்யபட்ட எக்ஸ்ஹாஸ்ட்கள் இந்த மோட்டார்சைக்கிளின் இரு பக்கத்திலும் பொருத்தபட்டுள்ளது.

சீட்கள்;

சீட்கள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளும், பிற கஃபே ரேசர் மோட்டார்சைக்கிளை போல், ஒரே ஒரு நபர் மட்டுமே அமரும் வகையில் உள்ளது.

ரைடிங் மோட்கள்;

ரைடிங் மோட்கள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், ரோட், ரெயின் மற்றும் ஸ்போர்ட் என 3 டிரைவிங் மோட்கள் உடைய ரைட் பை வயர் வசதி கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் பழமை நிறைந்த வாகனம் போல் காட்சி அளித்தாலும், இது சிறப்பானதாகவும், பாதுகாப்பாகாபானதாக வைத்திருக்கும் வகையில் இதில் ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

(*) ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்

(*) டிராக்ஷன் கண்ட்ரோல்

(*) எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள்

(*) எல்இடி டெயில்லேம்ப்கள்

(*) இஞ்ஜின் இம்மொபலைஸர்

(*) சீட்டிற்கு அடியில் உள்ள யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட்

போட்டி;

போட்டி;

இந்தியா வாகன சந்தைகளில், 2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளுக்கு, போட்டியாக எந்த வாகனமும் இல்லை.

அறிமுகம்;

அறிமுகம்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், இந்தியா முழுவதும் உள்ள 12 எக்ஸ்குளுசிவ் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை;

விலை;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், 10.90 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜூன் 3-ல் அறிமுகம்

இந்தியாவில் ஸ்பெஷல் ராக்கெட்டை அறிமுகப்படுத்தும் டிரையம்ஃப் நிறுவனம்!

டிரையம்ஃப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Iconic British motorcycle manufacturer Triumph has launched their 2016 Triumph Thruxton R Motorcycle in India. This Cafe Racer looks based new Thruxton R has Retro looks. Like other Cafe Racers, this also has seating option for single person alone. Thruxton R takes its name from legendary 500 mile Thruxton endurance race series. To know more, check here...
Story first published: Friday, June 3, 2016, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X