இந்தியாவின் சிறந்த பைக் விருதை வென்றது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி!

Written By:

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் புதிய பைக் மாடல்களில் அனைத்திலும் சிறந்த மாடலை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. ஜேகே டயர்ஸ் நிறுவனம் இந்த விருது வழங்கும் விழாவிற்கு ஆதரவை அளித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்ட புதிய பைக் மாடல்களில் சிறந்தவற்றை செய்வதற்கான பணிகள் நடந்தன.இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கைகளை சேர்ந்த ஆசிரியர்கள் அடங்கிய நடுவர் குழு சிறந்த பைக்கை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்தது.

2017ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பைக் மாடலுக்கான இந்த விருதை பெறுவதற்கு கடுமையான போட்டி இருந்தது. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 30 மாடல்களில் 12 புதிய பைக் மாடல்கள் போட்டியில் பங்கேற்றன.

பல புதிய மாடல்கள் போட்டியிட்டாலும், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கவாஸாகி வெர்சிஸ் 650, புதிய டிவிஎஸ் விக்டர், ஹோண்டா நவி மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகிய பைக் மாடல்கள் இறுதிக் கட்டத்தை எட்டின.

பைக்குகளில் இடம்பெற்று இருக்கும் சிறப்பம்சங்கள், செயல்திறன், கையாளுமை மற்றும் ஓட்டியபோது கிடைத்த சொந்த அனுபவங்களை வைத்து சிறந்த பைக் மாடலை தேர்வு செய்யும் பணியில் நடுவர் குழு ஈடுபட்டது. அதில், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் இந்த ஆண்டின் சிறந்த பைக்கிற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

டிவிஎஸ் அப்பாச்சி பிராண்டு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், அந்த பிராண்டின் மிக அதிசக்திவாய்ந்த மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

மிரட்டலான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என புதிய தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த பைக்கில் 197.75சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. கார்புரேட்டர் மாடல் அதிகபட்சமாக 20.23 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க்கையும் வழங்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல் அதிகபட்சமாக 21 பிஎச்பி பவரை வழங்க வல்லது 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பைரெல்லி டயர்கள் ஆப்ஷனலாக கிடைக்கிறது. சாதாரண மாடல் ரூ.89,215 விலையிலும், ஏபிஎஸ் மாடல் ரூ.94,215 விலையிலும் கிடைக்கிறது.

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கிற்கு, இந்த ஆண்டின் சிறந்த பைக் மாடலுக்கான விருது கிடைத்திருப்பது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயமாகவே கூறலாம்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் முதல் இடத்தை பெற்ற நிலையில், கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் இரண்டாவது நிலையையும், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மூன்றாவது இடத்தையும் பெற்றன.

English summary
TVS Apache RTR 200 4V has been crowned as the winner of the coveted Indian Motorcycle of the Year (ICOTY) 2017 title.
Story first published: Thursday, December 22, 2016, 12:14 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos