டிவிஎஸ் மோட்டார்ஸ் வழங்கும் டிவிஎஸ் ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்

By Ravichandran

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஐக்யூப் (IQube) என்ற பெயரில் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் ஐக்யூப்..

டிவிஎஸ் ஐக்யூப்..

சென்னையை மையமாக கொண்டு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டரை அறிமுகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

டிவிஎஸ் ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டர் கட்டாயம் அனைவரின் மனதையும் கவரையும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஹைப்ரிட் தொழில்நுட்பம்;

ஹைப்ரிட் தொழில்நுட்பம்;

காலத்தின் போக்கில், மக்கள் புதிய புதிய வகையிலான தொழில்நுட்பங்களை விரும்புகின்றனர்.

இதற்கு ஏற்றவாறு, இந்தியாவிலும், உலகின் பலவேறு வாகன சந்தைகளிலும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட வாகனங்களை அறிமுக செய்து வருகின்றனர்.

ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக் தொழில்நுட்பங்கள் தான் வருங்காலத்திற்கான தொழில்நுட்பங்கள் இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகங்கலும் இல்லை.

டிரேட்மார்க்;

டிரேட்மார்க்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஐக்யூப் மற்றும் பிற ஹைப்ரிட் பெயரிடும் முறை (Hybrid Nomenclatures) பாதுக்காத்து கொள்ளும் வகையில் டிரேட்மார்க் உள்ளிட்டவைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

காட்சிபடுத்தல்;

காட்சிபடுத்தல்;

முன்னதாக, டிவிஎஸ் ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டர், 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களிடம் உள்ள பேஸ்களை, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள டிவிஎஸ் ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டருக்கு உபயோகித்து கொள்ள உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிவிஎஸ் ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டர், 100 சிசி, சிங்கிள் சிலிண்டர், பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

இந்த ஹைப்ரிட் ஸ்கூட்டர், ஒரு எலக்ட்ரிக் மோட்டாரும் கொண்டிருக்கும்.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

டிவிஎஸ் ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டர், மேம்பட்ட வாகனம் இயக்கும் அனுபவங்களை வழங்கும் வகையில், பல்வேறு டிரைவிங் மோட்கள் கொண்டிருக்கும்.

டிவிஎஸ் ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டர் வாடிக்கைக்காரர்களுக்கு, பவர் மோட் மற்றும் எக்கானமி மோட் வழங்கப்படும்.

எக்கானமி மோட்டில், செயல்திறன் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்டவைக்கு உயர்மட்ட முன்னுரிமை வழங்கபட்டு அது நிறைவேறுவது உறுதி செய்யப்படுகிறது.

பவர் மோட்டில், மேம்பட்ட திறன் வெளிப்பாட்டிற்கு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பெட்ரோல் மோட்டார் ஆகிய இரண்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் ஹைப்ரிட் செக்மன்ட்;

இந்தியாவில் ஹைப்ரிட் செக்மன்ட்;

இந்தியாவில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட ஸ்கூட்டரின் சந்தை மிகவும் பெரியதாகும். இந்த ஹைப்ரிட் செக்மன்ட்டில் அறிமுகம் செய்யப்படும் வாகனங்கள் மக்களிடம் ஆதரவை பெற்றுவிட்டால் அது மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்.

ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் முழுக்க முழுக்க புதிய செக்மன்ட்டாக இருக்கும், இது போக்குவரத்து முறைகளையே மாற்றக்கூடிய வலிமை கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டிவிஎஸ் ஐக்யூப் ஹைப்ரிட் ஸ்கூட்டர், இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிவிஎஸ் ஹைபிரிட் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை

போர்ஷே நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும், ஹைப்ரிட் வேரியண்ட் விரைவில் அறிமுகம்

ஹைப்ரிட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Chennai based Two Wheeler manufacturer TVS Motors is planning to launch first Hybrid Scooter - TVS IQube Hybrid Scooter. Qube concept was showcased at 2012 Auto Expo in Delhi. TVS IQube Hybrid Scooter would feature a 100cc single-cylinder petrol engine with an electric motor. TVS IQube Hybrid Scooter is most likely to be launched in India by 2016-end..
Story first published: Saturday, May 28, 2016, 19:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X