டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைசூர் உற்பத்தி ஆலையில் விரிவாக்கம்

By Ravichandran

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைசூர் உற்பத்தி ஆலையின் விரிவாக்கத்திற்கு, கர்நாடகா அரசிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது.

சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த மைசூர் ஆலை உற்பத்தி ஆலையின் விரிவாக்கத்திற்கு 310 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதனால், பெங்களூரு மற்றும் மைசூர் பகுதியில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தம் 3 உற்பத்தி ஆலைகள் உள்ளன. ஒரு உற்பத்தி ஆலை தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியிலும், ஒரு உற்பத்தி ஆலை கர்நாடகாவின் மைசூர் பகுதியிலும், ஒரு உற்பத்தி ஆலை ஹிமாச்சல பிரதேசத்தின் நாலாகர் என்ற பகுதியிலும் அமைக்கபட்டுள்ளது. ஒரு சர்வதேச உற்பத்தி ஆலை, இந்தோனேஷியாவின் காராவாங் என்ற பகுதியில் அமைக்கபட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில், ஆண்டு உற்பத்திக்கான கணக்கில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 3 மில்லியன் வாகனங்களை தயாரிக்கிறது. இந்த நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கும், வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றவாறு ஏராளமான வாகனங்களை தயாரித்து வருகிறது. சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், மொபெட்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 3-சக்கர ஆட்டோரிக்‌ஷாக்களை கூட தயாரித்து வழங்குகின்றனர்.

tvs-motors-mysore-facility-expansion-plan-boost-production

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், சமீபத்தில் தான், புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 4வி மாடலை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்தது. இந்நிறுவனத்தின் மைசூர் உற்பத்தி ஆலையின் விரிவாக்க திட்ட, உற்பத்தியை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், காத்திருப்பு காலங்களை குறைப்பதிலோ அல்லது நீக்குவதிலோ மிகவும் உதவிகரமாக இருக்கும்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், வரும் காலங்களில் ஏராளமான இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

Most Read Articles
English summary
Chennai-based two-wheeler manufacturer TVS Motors has received Permission from Karnataka Government for expansion of its Mysore facility. TVS Motors will be investing approximately Rs. 310 crore, which helps in job generation also. This expansion of Mysore manufacturing unit will boost production and also eliminate waiting periods. To know more about TVS Motors expansion plans, check here...
Story first published: Tuesday, May 3, 2016, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X