டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் பண்டிகை கால சிறப்பு சலுகைகள்

Written By:

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், பண்டிகை காலங்களை ஒட்டி, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை அளிக்கின்றனர். இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒட்டி, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விதவிதமான சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் சலுகைகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தயாரித்து வழங்கும் அனைத்து டூ வீலர்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. பண்டிகை காலங்களில் வழங்கப்படும் சலுகைகளினால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என 2 தரப்பினருக்கும் லாபம் ஆகும். இத்தகைய சலுகைகளினால், விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபைனான்ஸ் தேர்வுகள்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்து டிவிஎஸ் தயாரிப்புகள் மீதும் டீலர்ஷிப்கள், 3.99% வட்டி விகிதத்தில் கடன் வசதி தருகின்றனர்.

குறிப்பு;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட டூ வீலர்கள் மீது இச்சலுகைகள் கிடைக்கிறது.

கிராமப்புற மக்களுக்கான சலுகைகள்;

கிராமப்புற மக்களுக்காக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பிரத்யேகமான சலுகைகள் மற்றும் ஆதாயங்களை அளிக்கின்றனர். கிராமப்புற மக்களுக்கு செக்-லெஸ் இஎம்ஐ (cheque-less EMI option) எனப்படும் செக்குகள் இல்லா இஎம்ஐ வசதிகளும் கிடைக்கும். வங்கி கணக்கு இல்லாத வாடிக்கையாளர்கள், தங்களின் இஎம்ஐ-களை கேஷ் நேரடி பணமாக கட்டலாம் என்ற சலுகைகளும் கிடைக்கிறது.

நல்ல வரவேற்பு;

ஓணம் மற்றும் கணேஷ் சதுர்த்தி ஆகிய பண்டிகைகளுக்கு பிறகு, தங்களின் தயாரிப்புகளுக்கு மேலும் அதிகமான வரவேற்பு கிடைப்பதாக டிவிஎஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது வரை, ஒட்டுமொத்தமாக பண்டிகை காலங்களின் போது நல்ல விற்பனை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், எவ்வளவு விற்பனை உயர்வு இருக்கலாம் என டிவிஎஸ் நிறுவனம் யூகிக்க விரும்பவில்லை.

மேம்பாடுகள்;

தற்போதைய நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் மிக விரிவான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் உடைய போர்ட்ஃபோலியோ கொண்டுள்ளது. பண்டிகை காலங்களுக்கு முன்பு தான், டிவிஎஸ் மோட்டர்ஸ் நிறுவனம் தங்களின் ஸ்டார்சிட்டி+ மற்றும் ஸ்போர்ட் மாடல்களை மேம்படுத்தி வழங்கியது.

சமீபத்திய அறிமுகம்;

சமீபத்தில் தான், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் ஜுப்பீட்டர் மில்லியன்ஆர் எடிஷனை அறிமுகம் செய்தது. இது, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
TVS Motors will be providing its customers with exciting offers and benefits for 2016 festive season.Customers can avail attractive finance options on all TVS products sold in India. Dealerships will be offering 3.99 percent interest on finance options. Rural areas can also avail of special offers and benefits from TVS Motors. To know more about TVS Motors Offers, check here...
Please Wait while comments are loading...

Latest Photos