1 லட்சம் விக்டர் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை

By Ravichandran

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், 1 லட்சம் விக்டர் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு சில ஆட்டோமொபைல் தயாரிப்புகள் மக்களுக்கு பிடுத்து விட்டால், அவை லட்ச கணக்கில் விற்பனையாகி சாதனை படைக்கிறது. அந்த வகையில், விக்டர் மோட்டார்சைக்கிள் மாடலில் 1 லட்சம் டூ வீலர்களை விற்பனை செய்து டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் படைத்த இந்த அபார சாதனை தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய விக்டர்...

புதிய விக்டர்...

சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தான், இந்த விக்டர் மோட்டார்சைக்கிளை தயாரித்து வழங்குகிறது. இது அறிமுகம் செய்யப்பட்டு 9 மாதங்கள் ஆகிறது. அதற்குள், இந்நிறுவனம் 1 லட்சம் விக்டர் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த விக்டர் மோட்டார்சைக்கிளின் அறிமுகம் மூலம், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த மோட்டார்சைக்கிள் சந்தை விற்பனை மதிப்பு பங்கு 8% என உயர்ந்துள்ளது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், உள்நாட்டு சந்தைகளில், தங்களின் சந்தை மதிப்பை 10% முதல் 12% வரை உயர்த்த திட்டம் கொண்டுள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்த விக்டர் மோட்டார்சைக்கிள், மிகப்பெரிய சந்தை முன்னோடியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

உயர்அதிகாரி கருத்து;

உயர்அதிகாரி கருத்து;

"1 லட்சம் குடும்பங்கள் எங்கள் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நிறுவனத்துடன் மேலும் பல்வேறு குடும்பங்களை இணைப்பதே எங்களின் குறிக்கோளாக உள்ளது" என டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியான அருண் சித்தார்த் தெரிவித்தார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிவிஎஸ் விக்டர், 3 வால்வ் எகோ-த்ரஸ்ட் 109சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 9.5 பிஹெச்பியையும், 9.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிவிஎஸ் விக்டர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஃப்யூவல்;

ஃப்யூவல்;

கார்ப்பரேட்டர் சிஸ்டம் மூலம் தான், டிவிஎஸ் விக்டர் மோட்டார்சைக்கிளில் ஃப்யூவல் கடத்தப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

டிவிஎஸ் விக்டர் மோட்டார்சைக்கிள் எலக்ட்ரிக் ஸ்டார்ட் முறையில் ஆன் செய்யப்படுகிறது. இது ஃபிரன்ட் டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

டிவிஎஸ் விக்டர் மோட்டார்சைக்கிள், கம்யூட்டர் செக்மென்ட் வகையை சேர்ந்ததாக உள்ளது. இது ஸ்டைலான தோற்றம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், எரிபொருள் திறன் மிக்கதாகவும் உள்ளது. ஒரு லிட்டருக்கு, இது 76 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

டிவிஎஸ் விக்டர் மோட்டார்சைக்கிள், பிளிஸ்ஃபுல் புளூ, ஜெனெரஸ் கிரே, பிட்டிஃபிக் சில்வர், ரெஸ்ட்ஃபுல் ரெட் மற்றும் பேலன்ஸ்ட் பிளாக் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

டிவிஎஸ் விக்டர் மோட்டார்சைக்கிள், ஹீரோ ஸ்பிளென்டர், ஹோண்டா லிவோ மற்றிம் டிரீம் சீரிஸ், பஜாஜ் பிளாட்டினா, சுஸுகி ஹயாதே மற்றும் மஹிந்திரா செஞ்சூரோ ஆகிய மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போட வேண்டி உள்ளது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

டிவிஎஸ் விக்டர் மோட்டார்சைக்கிள், டிஸ்க் பிரேக் கொண்ட வேரியன்ட் மற்றும் டிரம் பிரேக் கொண்ட வேரியன்ட் என 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

விலை;

விலை;

டிவிஎஸ் விக்டர் மோட்டார்சைக்கிளின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் விக்டர் - டிஸ்க் பிரேக் வேரியன்ட் - 58,500 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

டிவிஎஸ் விக்டர் - டிரம் பிரேக் வேரியன்ட் - 56,500 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிஎம்டபிள்யூ ரகசிய கார் பாதுகாப்பு மையத்தில் என்னென்ன கார்கள் உள்ளது தெரியுமா?

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கான ரயில்களும், ரயில் வழித்தடங்களும்!

இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற சிறந்த சஸ்பென்ஷன் அமைப்புடைய கார்கள்!

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motors company has crossed huge milestone of sales of 1 lakh units within 9 months of its launch in India. TVS Victor falls under commuter segment. TVS offers Victor in six different colours, including Blissful Blue, Generous Grey, Beatific Black Silver, Serene Silver, Restful Red, and Balanced Black Red. It gives mileage of 76km/l. To know more, check here...
Story first published: Friday, October 14, 2016, 15:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X