டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பம்!

Written By:

அரபிக் கடலின் ராணியாக வர்ணிக்கப்படும் கொச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கொண்டாடிய தருணங்களுடன் பெங்களூர் திரும்பிவிட்டோம். அந்த அற்புத தருணங்களின் ஈரம் காய்வதற்குள், டிவிஎஸ் ஸ்கூட்டருடன் நாகரீக கலாச்சார மையமாகவும், எமது டிரைவ்ஸ்பார்க்கின் தாயகமாகவும் விளங்கும் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை எமது குழுவுடன் கொண்டாட இருக்கிறோம்.

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள், கொண்டாட்ட காட்சிகளை இந்த செய்திகள் மூலமாக பதிவு செய்ய இருக்கிறோம். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் பெங்களூரில் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணித்த அனுபவம் மற்றும் காட்சிகளை இங்கே பதிவு செய்கிறோம்.

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக கருதப்படும் பெங்களூரின் அமைதி முகம் மாறி இப்போது நள்ளிரவு நேரத்திலும் பரபரப்பு மிகுந்த நகரமாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. மேலைநாட்டு தொடர்பு அதிகரித்ததையடுத்து, பப் கலாச்சாரமும் வேரூன்றி விட்டது. ஆனால், பெங்களூர் நகரின் வரலாறு மிகவும் தொன்மையானது.

கடந்த 15-ம் நூற்றாண்டின் மத்தியில் விஜயநகர பேரரசராக இருந்த முதலாம் கெம்பே கவுடா மன்னரால் 1537ல் கட்டப்பட்ட கோட்டையானது தற்போது பெங்களூரின் மத்திய பகுதியாக மாறியிருக்கிறது. அதிலிருந்து பெங்களூர் நகரின் கட்டமைப்பும், கலாச்சாரமும் துவங்கியுள்ளது. இப்போது நாட்டின் அழகான நகரங்களில் ஒன்றாக விளங்கும் பெங்களூர் பன்முக கலாச்சார மையமாகவும் தற்போது மாறியிருக்கிறது.

மேலும், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் கோடை வாசஸ்தலமாகவும் இருந்துள்ளது. அவர் கட்டிய அரண்மனை உள்ளிட்ட பல வரலாறு நினைவுச் சின்னங்களும் பெங்களூரின் வரலாற்றை பரைசாற்றும் விதமாக இருந்து வருகின்றன. ஆனால், பெங்களூரை இன்று கெம்பே கவுடா மன்னரும், திப்பு சுல்தானும் பார்க்க நேரிட்டால், அதன் கலாச்சாரமும், அமைப்பும் எந்தளவு மாறியிருக்கிறது என்பதை கண்டு நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள்.

வெகு சீக்கிரமாக பெருநகரமாக மாறிப்போன பெங்களூரில் வாகனப் பெருக்கத்தில் முன்னிலை வகிப்பதோடு, போக்குவரத்து நெரிசலும் புதிய அடையாளமாக மாறி விட்டது. போக்குவரத்து நெரிசலில் புகுந்து வேலைக்கு போவதும், வீடு திரும்புவதும் சாகசமாக மாறியிருக்கிறது. புத்தாண்டு களைகட்டி இருக்கும் இந்த நேரத்தில் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பதிவு செய்வதற்காக நேற்று புறப்பட்டுவிட்டோம்.

புத்தாண்டு களைகட்டிய நிலையில், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் அந்த கொண்டாட்டத்தை பதிவு செய்தவதற்கு புறப்பட்டுவிட்டோம். டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் சிறப்பான செயல்திறனும், கையாளுமையும் அலட்டல் இல்லாத பயணத்தை வழங்கியது.

முதல் இடமாக ஜேபி நகரில் இருக்கும் பெங்களூர் சென்ட்ரல் மால் வணிக வளாகத்துக்கு சென்றாம். இளைய சமுதாயத்தினரின் கூட்டத்தால் சென்ட்ரல் மால் நிரம்பி வழிந்தது. அங்கு சென்று டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரை நிறுத்தியதும், பல இளைஞர்களின் கவனத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் ஈர்த்தது. அட்டாகசமான வண்ணக் கலவையும், ஸ்டிக்கர்களும் அங்கு வந்த இளைஞர்களை ஈர்க்கும் விதமாக அமைந்தது.

அங்கிருந்து அடுத்து நேராக பெங்களூர் அரண்மனையை நோக்கி பயணம் தொடர்ந்தது. 1944ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனை நவீன பெங்களூரின் முக்கிய அடையாளமாகவும் தன்னை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. மேலும், பிரம்மாண்ட விழாக்களுக்கான தலமாகவும் இந்த அரண்மனை வளாகம் விளங்குகிறது.

மிதமான போக்குவரத்து நெரிசலில் மிதமான வேகத்தில் சில மோசமான சாலைகளையும் எளிதாக கையாண்டு எமக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கியது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர். குறிப்பாக, டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் சிறப்பான நிலைத்தன்மையை வழங்கும் பாடி பேலன்ஸ் டெக்னாலஜி குறிப்பிட்டு கூறும்படியாக இருக்கிறது. அத்துடன், டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், நைட்ரஜன் சார்ஜ்டு மோனோ ஷாக் அப்சார்பரும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தந்தது.

அதேபோன்று, சாலைகளில் அலட்சியம் காட்டும் பிற வாகன ஓட்டிகள், பாதசாரிகளை கையாளும் விதமாக மிகச் சிறப்பான பிரேக் செயல்திறனையும் வழங்கியது. இதனால், போக்குவரத்து மிகுந்த பகுதிகளை எளிதாக கடக்க உதவியது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்.

பயணத்தின் இறுதியாக பிரிகேட் சாலையில் அடைந்தோம். பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தினை உலகுக்கு பரைசாற்றும் முக்கிய பகுதிகளில் பிரிகேட் சாலையும் ஒன்று. வண்ண விளக்குகளால் ஜொலித்த வணிக வளாகங்கள், வர்த்த நிறுவனங்கள் நிறைந்த அந்த சாலையில் தனது ஒய்யாரமான ஸ்டைலால் எல்லோரையும் ஈர்க்க வைத்து டிவிஎஸ் வீகோ.

பிரிகேட் சாலைக்கு சென்று ஷாப்பிங் செய்ய முடியாமலும், வகை வகையான ரெஸ்ட்டாரண்ட்டுகளில் ஒரு பிடி பிடிக்காமல் திரும்ப முடியுமா என்ன? எனவே, நேற்றைய இரவு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் பயணம் இனிதே நிறைவுற்றது. இன்று இரவு பெங்களூரின் இதர பகுதிகளை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சென்று பதிவு செய்ய தயாராகிவிட்டோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Exploring the charms and delights of the pub capital of India, Bangalore on a TVS Wego as 2016 draws to a close.
Please Wait while comments are loading...

Latest Photos