இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

கொல்கத்தாவில், துர்காபூஜை கொண்டாட்டத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கண்டு களித்த அனுபவத்தின் முதல் பகுதியை கடந்த வாரம் வழங்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது தொடர்ந்து படிக்கலாம்.

By Saravana Rajan

முதல் நாள் பகல் முழுவதும் கொல்கத்தா நகரில் இருந்த பல துர்காபூஜை பந்தல்களை கண்டு களித்த பேரானந்தத்துடனும், திருப்தியுடனும் எமது எடிட்டர் ஜோபோ, ஆங்கில பிரிவு உதவி ஆசிரியர் ராஜ்கமல் மற்றும் புகைப்பட கலைஞர் அபிஜித் ஆகியோர் தங்கியிருந்த ஒய்சிஎம்ஏ விடுதிக்கு திரும்பினர்.

அன்று பார்த்த துர்காபூஜை பந்தல்கள், கொண்டாட்டங்கள், கொல்கத்தாவின் போக்குவரத்து நெரிசல், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் எந்தளவுக்கு கைகொடுத்தது என்பது பற்றிய விவாதங்களுடன் முதல் நாள் பயணத்தை நிறைவு செய்தனர். அப்போது, ஒய்எம்சிஏ விடுதியின் காப்பாளர் ஸ்வப்பனிடம் துர்காபூஜை கொண்டாட்டம் மற்றும் பயணத்தை பற்றி சிலாகித்து கூறியிருக்கின்றனர்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

இதைகேட்ட ஸ்வப்பன், இது என்ன பிரமாதம் என்பது போல ஒரு பார்த்துவிட்டு, துர்காதேவிக்காக அமைக்கப்பட்ட பந்தல்கள் பகலை காட்டிலும் நள்ளிரவு நேரத்திலும் சிறப்பாக இருக்கும். அப்போது நிதானமாகவும், மனம் விட்டு அம்மனை தரிசிப்பதும், கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதும் பேரானந்தமாக இருக்கும் என்று எமது குழுவினரிடம் தெரிவித்தார்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

அப்படியா என்று உணர்ந்து கொண்டு, எமது குழுவினர் உடனே இரவு துர்காபூஜை கொண்டாட்டத்தை கண்டு களிக்க முடிவு செய்தனர். அந்த பயணம் முழுமையான ஆனந்த்தத்தையும், திருப்தியையும் தந்ததா? இரவு நேரத்தில் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணித்தது புதிய அனுபவத்தை வழங்கியதா? தொடர்ந்து படியுங்கள்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

பகல் வேளையில் துர்கா பூஜை பந்தல்களை கண்டு ரசித்ததைவிட, இரவு நேரத்தில் விளக்குகள் வண்ணமயமான உலகத்தில் இருப்பது போன்ற உணர்வை தந்தது. பஜனைகளும், பக்தி பாடல்களுமாக துர்காபூஜை பந்தல்கள் பக்தி பரவசத்தில் மூழ்கியிருந்தன. அது ஒரு புதிய உலகத்தில் இருப்பது போன்ற உணர்வை தந்தது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

மழையோ, இரவோ துர்காபூஜை கொண்டாட்டங்களையோ, கொல்கத்தாவாசிகளின் சுறுசுறுப்பையோ பாதிக்கவில்லை. அவர்களின் முகத்தில் பக்தி பரவசமும், மகிழ்ச்சியும் கரை புரண்டு இருப்பதை காண முடிந்தது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

மறுபுறத்தில் மழையால் ஈரப்பதமும், தண்ணீரும் தேங்கியிருந்த கொல்கத்தாவின் குறுகலான ஷார்ட் கட் சாலைகளில் பாதுகாப்பான, விரைவான பயணத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் மூலமாக எமது குழுவினர் பெற்றனர். நினைத்த மாத்திரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் உடனடியாக துர்காபூஜை பந்தல்களுக்கு செல்ல டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் வழி வகை செய்தது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

வழியில் இருந்த ராமர் கோவில் அருகே சோரிபகன் சர்போஜினின் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த துர்காபூஜை பந்தல் மிகவும் சிறப்பாக இருந்தது. வண்ணமயமாக இருந்த அந்த பந்தலை பார்த்ததும், வியப்பை ஏற்படுத்தியது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

அந்த பந்தல் அருகே எமக்கு தோளோடு தோள் நிற்கும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரை வைத்து சில அற்புதமான படங்களை அபிஜித் எடுத்தார். அதன் பிறகு, தெருவெங்கும் வண்ண விளக்கு தோரணங்களின் ஒளி வெள்ளத்தில் மிதந்தபடி, விடுதிக்கு திரும்பினர்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

அந்த பல் வண்ண ஒளி வெள்ளத்தை வழங்கிய வண்ண விளக்குகளுடன் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் தனது கண்ணை கவரும் வண்ணக் கலவையுடன் போட்டி போட்டது. படத்தில் காண்பது வல்கனோ ரெட் என்ற இரட்டை வண்ணக் கலவை. வண்ண விளக்குகளுக்கு சவால் விடும் தோரணையில் போஸ் கொடுப்பதை காணலாம்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

இதுதவிர, பல சிறப்பான வண்ணங்களில் டிவிஎஸ் வீகோ கிடைக்கிறது. அதில், எமக்கு அளிக்கப்பட்ட வல்கனோ ரெட் தவிர்த்து, நீல வண்ணம் இரவு நேரத்திலும் பார்ப்போரை வசீகரித்தது. எங்கு சென்றாலும் பார்ப்போரை கவர செய்யும் வண்ணம் அது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

முதல் இரவு மட்டுமின்றி, தங்கியிருந்த மூன்று நாள் இரவு வேளைகளிலும் கொல்கத்தா நகரின் துர்காபூஜை கொண்டாட்டங்களை கண்டு ரசித்தபடி இருந்தனர் எமது டிரைவ்ஸ்பார்க் டீம். அதான் நான் இருக்கேன்ல என்பது போல கைகொடுத்த டிவிஎஸ் வீகோ கையில் இருந்ததே, தடங்கல் இல்லா பயணங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

மூன்று நாள் இரவுகளில் தொடர்ந்து பயணித்தாலும், கொல்கத்தாவின் துர்காபூஜை கொண்டாட்டங்களும், பந்தல்களும் எமது குழுவினருக்கு அலுப்பையோ, சலிப்பையோ துளியும் ஏற்படுத்தவில்லை. யாருக்கு ஒவ்வொரு நாளும் பரவசமும், உற்சாகமும் மனதில் குடி கொண்டிருந்தது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

எமது குழுவினர் கவனித்த மற்றொரு விஷயம். துர்காபூஜை என்பது குறிப்பிட்ட மதத்திற்கான பண்டிகையாக கொண்டாடுவதற்கான எந்த வரைமுறையும் இல்லை. சர்வ மதத்தினரும் தங்களது பாரம்பரிய விழா போன்று கொண்டாடுவதை பார்க்கும்போது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை தாத்பரியத்தின் சாரத்தை காணும் பாக்கியத்தையும் எமது குழுவினர் பெற்றனர்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

மகிசாசுரன் எனும் எருமை தலை கொண்ட அரக்கனை அன்னை ஆதி பராசக்தி துர்க்கை அவதாரம் எடுத்து 9 நாள் போரிட்டு, 10வது நாள் வதம் செய்து வெற்றிக் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இதனையை வடநாடுகளில் துர்காபூஜையாக கொண்டாடுகின்றனர்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

இந்த துர்காபூஜை மகத்துவத்தையும், இந்த விழாவிற்கு இந்துக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் காண்பதற்கு நிச்சயம் கொல்கத்தாவிற்கு விசிட் அடித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். அடுத்து நம் குழுவினர் கொல்கத்தாவின் நாவிற்கு இனிய பானிபூரி ஸ்டால் ஒன்றை நோக்கி நகர்ந்தனர்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

அங்கு கைதேர்ந்த பானி பூரி கடைக்காரர் தந்த காரசாரமான பானிபூரி ஐயிட்டங்களை ருசித்தனர். அதில், மிஸ்தி தோய் என்ற இனிப்பு சுவையுடைய தயிர் பூரி மிகுந்த சுவையுடையதாக இருந்ததாம். கொல்கத்தா செல்வோர் இதை சுவைக்க மறக்காதீர் என்ற குறிப்பையும் பகிர்ந்து கொண்டனர்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

பகல் என்றோ, இரவு என்றோ வித்தியாசம் இல்லாத அளவுக்கு துர்காபூஜை கொண்டாட்டங்களால் தூங்கா நகரமாக காட்சியளிக்கிறது கொல்கத்தா. எந்நேரமும் துர்காபூஜை பந்தல்கள் முன் பக்தி பரவசத்துடன் வரிசை கட்டி நிற்கும் மக்களின் பக்தி மெய்சிலிர்க்க வைத்தது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

திட்டமிட்டு சென்ற பயணங்களைவிட, திட்டமிடாமல் ஏதாவது ஒருவழியை பிடித்து வழியில் உள்ள துர்காபூஜை பந்தல்களை கண்டு களித்ததே த்ரில்லாகவும், திருப்தியாகவும் அமைந்தது. மூன்று நாட்கள் இரவு நேரங்களில் டிவிஎஸ் வீகோவை எடுத்துக் கொண்டு ஏதாவது ஒரு வழியை பிடித்து துர்காபூஜை பந்தல்களை சுற்றுவதே ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அதுவும், ஸ்கூட்டரில் சுதந்திரமாக அறிமுகம் இல்லாத கொல்கத்தா சாலைகளில் சுற்றியது மறக்க முடியாத அனுபவமாக தெரிவித்தனர்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

நெரிசல் மிகுந்த கொல்கத்தா சாலைகளை எந்த பிரச்னையும் இல்லாமல், கொண்டாட்டத்தை சிறக்க உதவியது டிவிஎஸ் வீகோ என்றால் மிகையில்லை. இந்த ஸ்கூட்டரில் 5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. முழுமையாக பெட்ரோல் நிரப்பியதால், 250 கிமீ தூரத்திற்கும் அதிகமான பயணத்தை வழங்கும். எனவே, பெட்ரோல் பங்கிற்கு செல்லும் தேவையே ஏற்படவில்லை.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

கொல்கத்தாவின் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் துர்காபூஜை இறுதி கட்டத்தை எட்டியது. ஆம், பந்தல்களில் வைத்து வழிபட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் வைபவமும் புதிய அனுபவத்தை தந்தது.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

துர்காபூஜை சிலையை கரைப்பதற்கு செல்லும் முன் பஜனைகளும், நடனமாடி பரவசத்தில் திளைத்திருக்கும் பக்தர்கள்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

துர்காதேவி சிலையை புனித நீரில் கரைக்கும் காட்சி.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

அரக்கனை அழித்து அமைதியின் சொருபமாக அவதார நோக்கத்தை முடிக்கும் துர்காதேவி சிலை.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

கொல்கத்தாவில், துர்காபூஜை பந்தல்களில் பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அதேபோன்று, சாலைகளும், தெருக்களும் கூட்ட நெரிசலாலும், போக்குவரத்து நெரிசாலும் சிக்கி திணறுகிறது. எனவே, அங்கு செல்பவர்கள் எமது குழுவினர் செய்தது போன்றே, திட்டமிடலுடன் செல்வது அவசியம்.

 இரவை பகலாக்கிய துர்காபூஜை கொண்டாட்டங்கள்.... வியக்க வைத்த கொல்கத்தா!

அடுத்து தீப ஒளி திருநாளை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் புனே நகரில் கொண்டாட டிரைஸ்பார்க் டீம் திட்டமிட்டிருக்கிறது. இந்த தீபாவளியை டிரைவ்ஸ்பார்க் டீம் எவ்வாறு கொண்டாடுகிறது என்பதை காண்பதற்கு காத்திருங்கள்!

கொல்கத்தா துர்காபூஜை கொண்டாட்டத்திற்கு செல்ல தூண்டிய கதை!

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கொல்கத்தாவில் துர்காபூஜை கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்- வீடியோ!

Most Read Articles
English summary
Exploring the charms & delights of Kolkata on Durga Puja 2016 on a TVS Wego. How did #WeGo about it? Read on to find out - Part 2.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X