ஆக்டிவாவுக்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்கூட்டரை களமிறக்கும் டிவிஎஸ்

Written By:

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக பல மாடல்கள் களமிறக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்து சிறப்பான தேர்வாக டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் உள்ளது. விற்பனையிலும் டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.

இந்த நிலையில், ஜுபிடர் கொடுத்த உற்சாகத்தை தொடர்ந்து, ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்கூட்டர் மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டர் குறித்து கிடைத்திருக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

தற்போது டிவிஎஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

 

ஜிபிடர் பெயருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும், பிரபலத்தையும் மனதில் வைத்து அதே பிராண்டு பெயரில் புதிய 125 சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய டிவிஎஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகிறது.

அதேநேரத்தில், புதிய பிராண்டு பெயரில் புதிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டமும் அந்த நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளதாம்.

சுஸுகி ஆக்செஸ் 125, ஹோண்டா ஆக்டிவா 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களைவிட கூடுதல் சிறப்பம்சங்கள், அதிக மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில மாதங்களில், அதாவது புத்தாண்டில் இந்த புதிய 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்கு டிவிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

English summary
TVS Motor Company Company is developing a new 125cc scooter which will be launched in early 2017 and a new scooter brand will be introduced with the new products.
Please Wait while comments are loading...

Latest Photos